ஞாயிறு, 30 ஜூலை, 2017

குழந்தை கடத்தலில் பாஜக எம்பி நடிகை ரூபா கங்கூலி.. சி ஐ டி விசாரணை .. பாஜக தலைவர்கள் கைது ..


கோல்கட்டா, : மேற்கு வங்கத்தில், குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக,
அம்மாநில, பா.ஜ., - எம்.பி.,யும், நடிகையுமான, ரூபா கங்குலியிடம், போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, சில தனியார் மருத்துவமனைகள், பிரசவத்துக்கு வரும் பெண்களிடம், அவர்களது குழந்தைகள் இறந்து விட்டதாகக் கூறி ஏமாற்றி, அந்த குழந்தைகளை விற்பனை செய்தது, 2016ல் வெளிச்சத்துக்கு வந்தது.சிலிகுரியில் உள்ள தொண்டு நிறுவனம், இதற்கு உடந்தையாக இருந்ததும், அம்மாநில, பா.ஜ., மகளிரணி தலைவர், ஜுஹி சவுத்ரிக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது; இதன்பின், அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, ஜுஹி சவுத்ரியுடன் இருந்த தொடர்பு பற்றி, ரூபா கங்குலியிடம், அம்மாநில, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.கோல்கட்டாவில் உள்ள, ரூபா கங்குலியின் வீட்டிற்கு சென்ற போலீஸ் அதிகாரிகள், அவரிடம் துருவி துருவி கேள்விகள் கேட்டனர். தினமலர்

கருத்துகள் இல்லை: