வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பிலிம் நியூஸ் ஆனந்தனின் பணியை தொடரும் பெரு.துளசி பழனிவேல்

பிலிம் நியூஸ் ஆனந்தனின் மறைவுக்கு பிறகு அவரது பணியை மக்கள் தொடர்பாளர் பெரு.துளசி பழனிவேல் அவர்கள் தொடர்ந்து வருவது சினிமாத்துறையினரால் வரவேற்கப்படுகிறது. தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். இவர் திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த போது நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என திரைப்படத் துறையின் அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த் திரைப்பட செய்திகள் அனைத்தும் “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.


தமிழ்த் திரையுலகச் செய்திகள் அனைத்தையும் வருடாவருடம் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் கடந்த வருடம் காலமானார். அவருடைய மறைவுக்குப் பிறகு, தென்னிந்திய சினிமா மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளரான, பெரு.துளசி பழனிவேல் தொடர்கிறார். கடந்த வருடம் வெளியான திரைப்படங்கள், திரையுலக நிகழ்வுகள், உதிர்ந்து போன நட்சத்திரங்கள் என பலவிதமான சினிமா செய்திகளைத் தொகுத்து இந்தாண்டு ஜனவரி மாதமே ஒரு புத்தகமாகவே வழங்கியிருந்தார்.

இந்நிலையில், சினிமாவிற்கான இந்த தகவல் களஞ்சியத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் பாகத்தில் நிகழ்ந்த தமிழ்த் திரையுலகத்தின் ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் “துளசி சினிமா நியூஸ்” என்ற பெயரில் ஒரு புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார். அனைத்துத் தரப்பினருக்கும், அந்த புத்தகத்தை இலவசமாக வழங்கி திரையுலகப் பத்திரிகையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் படங்கள் வெளியாகி உடனேயே திரையரங்குகளில் இருந்து ஓடோடிப் போய்விடும் நிலையில், கலைத்துறையினர் பற்றிய இந்த புத்தகம் அவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. பெருதுளசி பழனிவேல் இந்த பணியை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.!
 மாலைமலர்

கருத்துகள் இல்லை: