செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

நிதிஷ்குமார் பதவியை பறிக்க வழக்கு - விசாரணைக்கு ஏற்றது சுப்ரிம் கோர்ட்

புதுடெல்லி: 1991ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பார்ஹ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிதாராம் சிங் என்பவர் கொல்லப்பட்டார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நிதீஷ்குமார் உட்பட சிலர் மீது அப்போது கொலை, கொலைமுயற்சி ஆகிய கிரிமினல் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது பீகார் மாநில முதல்வராக பதவி வகிக்கும் நிதிஷ்குமார் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதால் பீகார் மாநில மேல்சபை உறுப்பினராக அவர் வகித்து வரும் பதவியை ரத்துசெய்ய வேண்டும் என எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் சுப்ரிம் கோர்டில் மனுதாக்கல் செய்திருந்தார். நிதிஷ்குமார் தன் மீதான கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதை மறைத்து மேல்சபை தேர்தலில் போட்டியிட்டு வென்றது செல்லாது என அறிவித்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் நிதிஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதாவா ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். nakkeeran


கருத்துகள் இல்லை: