குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
பகுதிகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியின் கார்
மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி சென்றனர். தாக்குதலிலிருந்து
ராகுல்காந்தி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
குஜராத் மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வட குஜராத்தின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுச் சென்றார். மேலும் குஜராத் மாநிலத்துக்கு 500 கோடி ரூபாய் நிதியும் வழங்கியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், குஜராத் சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி இன்று (ஆகஸ்ட்-4) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தனிரா பகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பனஸ்கந்தா பகுதிக்கு ராகுல்காந்தி வந்தபோது, அவரின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ராகுல்காந்திக்கு எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாறாக கண்ணாடிகள் நொறுங்கி, கார் பலத்த சேதமடைந்தது. ராகுலின் பாதுகாப்பு அதிகாரியும் காயமடைந்தார்.
தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜெவாலா,'காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெறுப்பூட்டக்கூடிய, அவமானகரமான செயலாக உள்ளது. தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். பாஜக-வினர்தான் இந்த தாக்குதலுக்கு முழுக் காரணமும் ஆவர், வன்முறையும், உடல் ரீதியிலான தாக்குதலுமே அவர்களின் கலாச்சாரமாக உள்ளது. கோட்சே கலாச்சாரத்தை பாஜக வளர்க்கிறது' என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக