1. ta.wikipedia.org
தளத்திற்கு சென்று "புதிய கணக்கை உருவாக்கவும்" என்ற லிங்க் பக்கத்தின்
மேல் வலது மூலையில் இருக்கும். அதை க்ளிக் செய்து நிரப்புங்கள்.
2. உள்ளே நுழைந்ததும் இடது பக்கத்தில் "புதிய கட்டுரை எழுதுக" என்ற லிங்க் இருக்கும். அதை கிளிக்கினால் ஒரு பக்கம் வரும். அதில் நீங்கள் எழுத விரும்பும் கட்டுரையின் தலைப்பை இடவும்.

3. பொதுவான தலைப்பு என்றால் "வேண்டாம்" என்று மறுத்து என்ன தலைப்பில்
எழுதலாம் அல்லது மொழிமாற்றம் செய்யலாம் என்று அதுவே பரிந்துரைக்கும்.
அல்லது நீங்களே புதிதாக ஒன்றை பரிந்துரைக்கலாம்
4. தலைப்பை தேர்ந்தெடுத்தவுடன் இடது பக்கம் ஆங்கில மூலமும், வலதுபக்கம் நீங்கள் டைப் பண்ணவேண்டிய பகுதியும் தோன்றும். ஆங்கில மூலத்தை படித்து அதற்கேற்ற தமிழ் கட்டுரையை நீங்கள் எழுதலாம்.
5. இது தான் ஆரம்பப்பணி. உங்கள் பங்களிப்பு அதிகரிக்க அதிகரிக்க இந்த குழுமத்தில் உள்ள பலரும் உங்களை தொடர்பு கொள்வார்கள். உங்களின் பொறுப்புகள் கூட வாய்ப்புண்டு.
6. மூத்த உறுப்பினர்கள் உங்களுக்கு இந்த கட்டுரையை எழுதலாம் என்று பரிந்துரைப்பார்கள். அதையும் முயற்சிக்கலாம். அல்லது உங்களது விருப்பமான பகுதியை எடுத்து எழுதலாம்.
7. வெறும் கட்டுரை மட்டுமல்ல, புகைப்படங்கள், ஒலிநாடாக்கள், வரைகலை, விளக்கங்கள் என்று நிறைய எழுதலாம்.
8. நிறைய அறிவியல், கணித கட்டுரைகள் நிரப்பப் படாமலேயே உள்ளது. இந்தப் பகுதியில் உங்களது பங்களிப்பு நிறைய தேவை. காரணம் தமிழ் வழியில் படிக்கும் நிறைய அரசு பள்ளி கல்லூரி மாணவர்கள் இதை படிக்கிறார்கள். மேலும் இங்கு எழுதுவது காலத்திற்கும் பயன் கொடுக்க கூடியது
9. இது போக நீங்கள் கல்லூரியில் படித்த பாடங்கள் எதுவென்றாலும் அதில் கட்டுரை இருக்கிறதா என்று தேடிப் பாருங்கள். இல்லையென்றால் எழுதத் துவங்குங்கள். இந்த சப்ஜெக்ட் என்று இல்லை எதை பற்றியும் இங்கு எழுதலாம். ஆனால் அதற்குரிய தரவுகளுடன் எழுதவேண்டும்.
10. இது ஒரு சமூகப்பணி. நீங்கள் எழுதுவதை உலகமே கவனிக்கும், பயன்படுத்தும். கல்வெட்டில் எழுதுவது போல. காலத்திற்கும் நிலைத்து நிற்கும். ஒரு மொழியின் வளர்ச்சி அந்த மொழியில் வெளியாகும் புத்தகங்களின் அளவையும், விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளின் அளவையும் பொறுத்தே இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக