Divya Bharathi
ஆவணப்பட
இயக்குனர் திவ்யாபாரதி மீதான புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி
அவர்களின் நேரடிக் குற்றச்சாட்டுக் காணொளி, அந்த அமைப்பினரால் அவர் மீது
வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆவணம் இரண்டுமே சந்தேகமில்லாமல் பிஜேபியின்
நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்ப அவர்களது மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.
‘கக்கூஸ்’ ஆவணப்படம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது முதல்
குற்றச்சாட்டு, இரண்டாவது திவ்யபாரதி நக்சல்களுடன் தொடர்பு கொண்டவர் எனும்
குற்றச்சாட்டு.
ஆவணப்படம் தொடர்பான, குறிப்பிட்ட சாதி தொடர்பானதுதான் ஆட்சேபம் எனில் ‘இந்திய இறையாண்மை-நக்சல் பிரச்சினை’ இதில் எங்கே வந்தது?

இந்திய கக்கூஸ் பிரச்சினை என்பது பிரித்தானிய தொலைக்காட்சியான ‘சேனல்
நான்கில்’ விவாதிக்கப்படுகிறது. அனுபம்கெர், அக்ஷய்குமார் போன்ற அரசு நடிக
ஆதரவாளர்கள் ஒரு புறமும், இது கொடும் யதார்த்தம் எனும் பெண் நடவடிக்னையாளர்
ஒரு புறமும் விவாதிக்கிறார்கள்.
ஒடுக்கப்படவர்களுக்காகப் போராடும் ஒரு இயக்கம் இந்தப் படத்திற்கு ஆதரவாக அல்லவா இருக்க வேண்டும்? ஏன் பிஜேபியின் மொழியில் அது பேசுகிறது?
பிஜேபியின் நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே திவ்யாபாரதி மீதான அச்சுறுத்தலும் அமைந்திருக்கிறது. அதனது தந்திரோபாயம் என்பது பார்ப்பனர்களின் தலைமையைத் தக்கவைக்க, பார்ப்பனரல்லாத கதம்ப அரசியல்காரர்களைத் தம் பக்கம் அணிதிரட்டி, இந்துத்துவத்திற்கு எதிராக இருக்கும் களப்போராளிகள் மீது வன்முறையை ஏவுவது.
பாப்ரி மஜீத் இடிப்பு முதல் எழுத்தாளர் அழிப்பு வரை இதுதான் அவர்களது திட்டம். தமிழகத்தில் பிஜேபி மூளை புதிய தமிழகம் கட்சியை அதனது நிகழ்ச்சி நிரலுக்குத்தகப் பாவிக்கிறது என்பதற்கான சான்றுதான் திவ்யாபாரதி மீதான பிஜேபி-புதிய தமிழகம் அமைப்பினரின் கூட்டு அச்சுறுத்தலாக ஆயிருக்கிறது. இதற்கு எதிராக படைப்பாளர் சுதந்திரத்தைக் கோருவோரின் கூட்டுக்குரல் அவசியமாகியிருக்கிறது...Yamuna Rajendran
தோழர் அவர்களின் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக