Prakash JP
·
சென்னையில் பெரு வெள்ளம் வந்த போது பிஜேபி பக்தர்கள் திரும்ப திரும்ப இது 50 வருட திராவிட ஆட்சியின் அவலம் என்று புலம்பிக் கொண்டு இருந்தனர். தற்பொழுது அதே மழை குஜராத்தில் பெய்து வெள்ளத்தில் அனைத்து சாலைகளும் பாலங்களும் அடித்து செல்லப்பட்டு மக்கள் பல பகுதிகளில் அவதிப்பட்டு வருகின்றனர். இதை 15 வருட மோடி ஆட்சியின், 25 வருட பிஜேபி அவலம் என்று அவர்கள் ஒப்புக் கொள்வார்களா..?
குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அபியானா கிராமத்தில் வெள்ளத்தில்
சிக்கியவர்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்க்கப்பட்டனர். அவர்கள்
பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநில நிர்வாகம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அகமதாபாத், காந்திநரில் 54,517 பேர் தாழ்வான
பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அகமதாபாத் 200
மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சபர்மதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்
பெருக்கின் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்று மாவட்ட ஆட்சியர் அவந்திகா சிங் கூறியுள்ளார். தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக