Vijay Bhaskarvijay:
ஒரு மனிதன் என்ன சாதனை வேண்டுமானாலும் செய்திருக்கலாம்.
ஆனால் சரியான சமூக நீதி பார்வை இல்லையென்றால் அச்சாதனைகள் பெரும் அளவில் போற்றப்படாது என்ற மெசேஜை,
முகநூலில் உள்ள சமூக அக்கறையுள்ளவர்கள், அப்துல் கலாமை விமர்சிப்பது, கலாய்ப்பது போன்ற பதிவுகளால் செய்து வருவதை ரசிக்கிறேன்.
இத்தகைய விமர்சனங்களை அனைத்து ஆளுமைகள் மேலும் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
வாழும் எழுத்தாளர்கள், வாழும் கலைஞர்கள், வாழும் நடிகர்கள், வாழும் அரசியல்வாதிகள் மீது தொடர்ச்சியாக வைக்க வேண்டும்.
இத்தகைய விமர்சனங்களை அவர்கள் கண்டுகொள்ளாதது போல் நடித்தாலும் ஏதாவது ஒருவகையில் அவர்களை வசதியில்லாமல் செய்யும். அதுதான் சமூகத்துக்கு தேவை.
’பெரும்பான்மை சமூகம்’ அத்தகைய ஆளுமைகளை பாராட்டினாலும், அறிவாளி சமூகம் என்று அத்தகைய ஆளுமைகள் மனதுக்குள் நினைக்கும் சமூகம் எப்போது இவ்விமர்சனங்களை காட்டமாக வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
குறிப்பாக இளைஞரக்ள் இத்தகைய சமூக நீதி அக்கறை இல்லாத ஆனால் நல்ல கலை தெரிந்த கலைஞர்களை எள்ளி நகையாட வேண்டும்.
சமூக நீதி பார்வையில்லாமல் நீ என்னதான் ஸீன் போட்டாலும் அது வேஸ்ட் என்பதை அவர்களிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
மேலும் அப்துல் கலாம் ஏன் அப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பது பற்றிய ஆய்வு மனப்பான்மையும் வேண்டும்.
1. கலாமுக்கு சிறுவயதில் அப்படி சமூகநீதியாக யோசிக்கும் பார்வையை கொடுக்காமல் விட்டது நம் கல்வித்திட்டமா? ஆசிரியர்களா? பெற்றோர்களா?
2.கலாம் ஒரு காலத்தில் வாசித்திருந்த தின இதழ்கள், ஊடகங்கள் அவருக்கு அவ்வறிவை கொடுக்கமால் இருந்தனவா?
3.கலாம் பெரியவராய் வளர்ந்த பிறகு அவர் கல்லூரியில் படித்தாரே அங்குமா அவருக்கு சமூகநீதியை கற்றுக் கொடுக்கும் சூழ்நிலை அமையவில்லை. அப்படியானால் கல்லூரியிலும் சமூக நீதி கற்றுக் கொள்ளும் வாய்ப்பில்லையா?
4.அவர் வேலை பார்க்கும் அலுவலகம் எங்கிலும் அதைக் கற்றுக் கொள்ள வாய்ப்பில்லாமல்தானே இருந்திருக்கிறது.
5.இப்படியெல்லாம் ”சமூகநீதி பார்வை” இருந்தால் வாழ்க்கைச் சக்கரத்தில் மேலே மேலே முன்னேற முடியாது என்ற எண்ணம் இருந்திருக்குமா ? ஒருவேளை அவர் ஆழ்மனதில் இருந்திருக்குமோ? அப்படி இருந்தால் அது நம் நாட்டின் சமூக அவல System த்தின் பிரச்சனைதானே.
இந்த சிஸ்டத்தில் மாட்டுக்கறி தின்னும் உரிமை பேசாமல், கோவிலுக்கெல்லாம் போய்விட்டு, ஜாதி பார்க்கும் சாமியார்களை வணங்கி மதவெறியர்கள் சொல்லும் ”நல்ல முஸ்லிம்” ஆக இருந்தால் மட்டுமே மேலே உயர முடியும் என்பது அவருக்கு தெரிந்திருக்குமோ.
அவருக்கு தெரிந்து அப்படி தந்திரமாக இருந்தால் கூட பரவாயில்லை. அவர் ஆழ்மனதில் அப்படி ஒரு படிமம் அவரை அறியாமலே படிவது எப்பேர்ப்பட்ட ஆபத்தாக இருக்கும். அது மாதிரிதானே பொதுமக்கள் அனைவருக்கும் மனதில் படியும்.
நான் சொல்வது புரிகிறதா?
ஒரு பள்ளி மாணவனுக்கு பள்ளிக்குள் காலெடுத்து வைக்கும் போதே “இங்கே இப்படி இருந்தால்தான் சரி” என்ற மனது அவன் ஆழ்மனதிலேயே படிந்திருக்கும். ஸ்கூல்ன்னா அப்படி ஸ்கூல்னா இப்படி என்று அவன் அப்பா அம்மா அண்ணன் பக்கத்து வீட்டு அக்கா என்று அனைவரும் ஸ்கூல் பற்றி அவர்களுக்குள் பேசும் போது, அதைக் கேட்டுக் கேட்டே ஆழ்மனதில் ”ஸ்கூல்லனா இப்படித்தான்” என்ற எண்ணம் படிந்திருக்கும்.
அது மாதிரி அப்துல் கலாம் வளரும் போதே இந்த சமூகம் “இந்தியான்னா அது இந்துவெறி சமூகம்தான். அத அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்தா மேலே மேலே போகலாம். அதற்கு பிடிக்காததைச் செய்தால் உயரவே முடியாது” என்ற எண்ணத்தை அவர் மனதில் படிய வைத்திருக்குமோ.
6. அப்படியானால் அப்துல் கலாமே சில நல்லதை பேசாமல் இருந்தாரா? அல்லது சிஸ்டம் அவரை பேசாமல் ஆக்கி வைத்திருந்ததா.
இப்படி யோசிக்கும் போது அப்துல் கலாமின் மெளனத்துக்கு பின்னால் இருக்கும்
”பெரும் அடிப்படைவாத சமூகத்தின் அசைவை ” விளங்கிக் கொள்ளலாம்.
ஒன்றிரண்டு சம்பவங்களைச் சொல்லி கலாய்த்தோம் போனோம் என்றில்லாமல்,
சமூக அக்கறையை உள்வாங்கி கலாய்ப்பது முக்கியமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக