குஜராத்திலிருந்து நாடாளுமன்ற மேலவைக்கு பா.ஜ.க தலைவர்
அமித்ஷா மனு தாக்கல் செய்கிறார் என்றதுமே “பேரக் குதிரை”கள் பொங்கி
எழுந்து விட்டன. வரிசையாக காங்கிரசு எம்.எல்.ஏ -க்கள் தாமரையில் தஞ்சம்
அடையும் காட்சியைக் கண்டு கதி கலங்கிய காங்கிரசுக் கட்சி மிச்சமிருக்கும்
42 சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பாக பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தது.
பெங்களூரு அருகே ராமநகரா மாவட்டத்தில் இருக்கும் ஈகெல்டான் ஃகால்ப் ரிசார்ட்டில்தான் மேற்படி உறுப்பினர்கள் சர்வ வசதிகளுடன் தங்கியிருக்கின்றனர். தற்போது அந்த விடுதியில் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதித்து வருகிறது.
குஜராத் எம்.எல்.ஏக்களை உடன் தங்கியிருந்து கவனித்து வரும் கர்நாடக அமைச்சர் டி.கே ஷிவக்குமாரின் அறையை வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு தேடுகின்றனர். பி.டி.ஐ செய்திப்படி இந்த் அமைச்சரின் டெல்லி வீட்டில் ஐந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறதாம்.
காங்கிரசின் மூத்த தலைவரும், சோனியாவிற்கு நெருக்கமானவருமான அகமது பட்டேல் குஜராத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவைக்கு தெரிவு செய்ய 45 எம்.எல்.ஏக்கள் தேவை. இந்த வார இறுதியில் நடக்க இருக்கும் தேர்தலின் போது தனது சட்ட மன்ற உறுப்பினர்களை பா.ஜ.கவின் பண பேரத்திலிருந்து பாதுகாக்கவே காங்கிரசு கட்சி ஜூலை 30-ம் தேதி முதல் பெங்களூருவில் அவர்களை காப்பாற்றி வருகிறது.
கர்நாடக எரிசக்தி துறை அமைச்சரான டி.கே.ஷிவகுமாரிடம் மட்டும்தான் சோதனை செய்கிறோமே அன்றி காங்கிரசு எம்.எல்.ஏக்களிடம் அல்ல என்று வருமான வரித்துறை கூறியிருக்கிறது. இந்த சோதனை இதற்கு முன்பாகவே தீர்மானிக்கப்பட்டதாகவும், குஜராத் எம்.எல்.ஏ-க்கள் வரும் போது இது நடப்பது தற்செயலானது என்றும் அது கூறியிருக்கிறது. அதாவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்கள்.
அமித்ஷா மேலவைக்கு தாக்கல் செய்ததுதம், அதில் அவர் குறிப்பிட்ட 300% அதிகரித்த சொத்து விவரம் ஊடகங்களில் இருந்து காணாமல் போனதும், பிறகு காங்கிரசு எம்.எல்.ஏ-க்களை பாஜக விலைக்கு வாங்கியதும் போதவில்லை என்பதால் இப்போது நேரடியாக பெங்களூருவில் தங்கியிருக்கும் விடுதியில் சோதிக்கிறார்கள்.
கூவத்தூரில் சசிகலா குடும்பம் அ.தி.மு.க-எம்.எல்.ஏ-க்களை வைத்து பகிரங்கமாகவே கும்மாளம் நடத்திய போது ஓபிஎஸ்-ஸுக்கு நேரம் கொடுத்து அவர்களை இழுக்கலாம் என காத்திருந்தார் கவர்னர். மேலும் சசிகலா கும்பல் தனது எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பாஜகவின் ஆணைப்படி கவர்னர் மும்பையில் சமோசா சாப்பிட்டுவிட்டு வயிறு சரியில்லை என்று விடுமுறை போட்டார். பிறகு ஏப்பம் விட்டு மெல்ல வந்து சசிகலா உள்ளே போன பிறகே எடப்பாடிக்கு அரை மனதுடன் அனுமதி கொடுத்தார்.
கூவத்தூர் எம்.எல்.ஏ-க்களிடம் சசிகலா கும்பல் மட்டுமல்ல, ஓபிஎஸ் கும்பலும் பணபேரம் செய்த வீடியோக்களே வெளிவந்த போதும் இதே வருமான வரித்துறை குறட்டை விட்டு படுத்துவிட்டது. என்ன இருந்தாலும் இந்த ஜனநாயகம் காவிக்கறையுடன் ஜொலிக்கிறதல்லவா!
பா.ஜ.கவின் நேரடியான பாசிச நடவடிக்கைகளை மற்றுமொரு ஆளும் வர்க்க கட்சியான காங்கிரசாலேயே எதிர் கொள்ள முடியவில்லை என்பதற்கு காரணம் ஏதோ அவர்களுக்கிடையேயான கோஷ்டி மோதல் என்பதல்ல. இந்த அமைப்பு முறையே தன்னிடம் எந்த ஜனநாயக விழுமியங்களும், நடவடிக்கைகளும் இல்லை என்பதை அம்மணமாக ஒத்துக் கொண்ட காலமிது.
இப்போது பா.ஜ.கவின் பாசிசத்தை எதிர்த்து மக்களே நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவது ஒன்றுதான் நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி!
செய்தி ஆதாரம் : வினவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக