திங்கள், 31 ஜூலை, 2017

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரை அறைக்குள் பூட்டிவைத்த காவல்துறை!


மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பும் என எண்ணி, இன்று சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரை, காவல்துறையினர் கல்லூரி வளாகத்திற்குள் அடைத்து வைத்துள்ளனர்.கடந்த சில வாரங்களாக அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், மத்தியில் ஆளும் பாஜக அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்டித்து, போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார்.அருண் ஜேட்லியின் வருகையின் போது, மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடக்கூடுமெனக் கருதி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் 4 மாணவிகள் உட்பட 15 பேரை நூலகத்திற்கு அருகிலுள்ள அறையில் மதியம் 2.00 மணிமுதல் காவல்துறையினர் அடைத்து வைத்துள்ளனர்.
அதில் சிலர் கல்லூரிக்கு சிறப்பு வகுப்புகளுக்காக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.>நேற்று சென்னை மாநகரக் காவல்துறை உயர்அதிகாரி ஒருவர், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் போராட்டம் நடத்தப்போகிறீர்களா? என விசாரித்துள்ளார். அவர்கள் இல்லை என தெரிவித்திருந்தும், இன்று 15 மாணவர்களை ஒரு அறைக்குள் அடைத்து வைத்துள்ளனர்;- சி.ஜீவா பாரதி  நக்கீரன்

கருத்துகள் இல்லை: