திருச்சி
மாவட்டம் மணப்பாறை அடுத்த சரளப்பட்டியை சேர்ந்த ரதிதேவி மற்றும்
வைரம்பட்டியை சேர்ந்த செல்வி ஆகியோர் வையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்
10-ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச்
சென்ற மாணவிகள் இருவரும் கடந்த 2-ம் தேதி மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மாணவிகள் இருவரையும் அவர்களது பெற்றோரும், காவல்துறையினரும்
தேடி வந்தனர்.இந்தநிலையில்,3-ம்
தேதி காலை வையம்பட்டியை தட்டாரப்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில்
மாணவிகள் இருவரும் சடலமாக கிடக்கிறார்கள் என்கிற தகவல் தீயாகப் பரவ
ஆரம்பித்தது.விஷயம்
கேள்விப்பட்டவுடன் முதன் முதலாக அந்த இடத்திற்கு வந்த பள்ளியின் தலைமை
ஆசிரியர் முருகேசன், மாணவியின் உடலை பார்க்க செல்லாமல் அருகில் வேறு
ஏதேனும் பொருள் கிடக்கிறதா என்று தேடி பார்த்தவர் மாணவியின் பையில்
வைத்திருந்த ஜாம்மன்ரி பாக்ஸ்-ல் வைத்திருந்த கடிதத்தை எடுத்துச்
சென்றிருக்கிறார்.அதன் பிறகு தகவலறிந்து வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவிகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர்.
இதையடுத்து மாணவிகள் இருவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
gt;இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய ரயில்வே எஸ்பி ஆனிவிஜயா மற்றும் டி.எஸ்.பி பன்னீர்செல்வம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வருகை தந்து விசாரணையை துவக்கினார்கள்.
மாணவிகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனே வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் வையம்பட்டியை சுற்றி உள்ள கிராம மக்கள் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையும், வையம்பட்டி காவல்நிலையத்தையும் தொடர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
;நாம் இது குறித்து விசாரிக்கையில் மாணவிகள் தற்கொலை பின்புலத்தில் தலைமை ஆசிரியர் இருப்பதாகவும் அவர் எப்போதும் வீம்புகாராகவும், பிடிவாதம் கொண்டவராகவும், மாணவிகள் மீது எரிச்சல் கொண்டவராக இருப்பதாக சொல்கிறார்கள்.;
மாணவிகள் எழுதிய கடித்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் விக்னேஷ்வரன், சண்முக பாண்டியன் ஆகியோர் இந்த குறிப்பிட்ட மாணவிகள் பெயர்களை அசிங்கமாக எழுவதும், மாணவிகளிடம் முறையில்லாமல் நடந்து கொள்வது குறித்தும் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்கிறார்கள். பள்ளியில் உள்ள சுவர்களில் அசிங்கமாக எழுதி அவமானப் படுத்தியத்தில் தான் அவமானம் தாங்காமல் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள் மாணவிகளின் பெற்றோர்.
மாணவிகள் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட அந்த பள்ளியை சேர்ந்த விக்னேஷ்வரன், சண்முக பாண்டியன் 2 பேரை, கைது செய்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தலைமை ஆசிரியர் மீது வழக்கு மீது பதிவு சிறையில் அடைக்கும் வரை திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.
;பள்ளி மாணவிகள் உயிர் பறிபோன விவகாரங்களுக்குப் பின்னணியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.>- ஜெ.டி.ஆர் நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக