1. இந்தியா ஒரு இந்து நாடு என்று கூறியவர் யார் ?
கேஷவ் பலிராம் ஹெட்கேவார் 2.சிகாகோவில் சுவாமி விவேகானந்தா எந்த மதத்தை முன்னிருத்தினார் ?
இந்துத்துவா
3. மகாராஜ் சுஹேல்தியோ என்கிற மன்னர், வெட்டி சாய்த்த இஸ்லாமிய படையெடுப்பாளர் பெயர் என்ன ?
சையத் சலார் மசூத் காஸி
4.ராம் ஜென்மபூமி எங்கிருக்கிறது ?
அயோத்யா
கேஷவ் பலிராம் ஹெட்கேவார் 2.சிகாகோவில் சுவாமி விவேகானந்தா எந்த மதத்தை முன்னிருத்தினார் ?
இந்துத்துவா
3. மகாராஜ் சுஹேல்தியோ என்கிற மன்னர், வெட்டி சாய்த்த இஸ்லாமிய படையெடுப்பாளர் பெயர் என்ன ?
சையத் சலார் மசூத் காஸி
4.ராம் ஜென்மபூமி எங்கிருக்கிறது ?
அயோத்யா
- ஹரிஜன்ஸ் என்று காங்கிரசும், காந்தியும் கூறியதை எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன ?
Congress and Gandhi Have Done
“சாமான்ய க்யான் பிரதியோகிதா – 2017” என்பது உத்தரப்ரதேச பள்ளிகளில் நடைபெறும் பயிற்சித் தேர்வுகளுக்காக அந்த மாநில அரசு அளித்துள்ள 70 பக்க பாட புத்தகத்தின் பெயர். அதில் இடம் பெற்றுள்ள பொது அறிவுக்கேள்விகள்தான் இவை.
சிகாகோவில் விவேகானந்தார் இந்து மதத்தை பற்றிதான் பேசினாரேத் தவிர , இந்துத்துவத்தை அவர் முன்னெடுக்கவில்லை. தரவுகளோ, தகவல்களோ, உத்தர பிரதேச அரசின் இந்த புத்தகத்திற்கு தேவைப்படவில்லை என்பதும், பாரதீய ஜனதா அல்லது ஆர்எஸ்எஸின் ஊதுகுழலாக மட்டுமே இந்த புத்தகம் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
தேசியவாதம், இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் கொள்கைகள், தீனதயாள் உபாதாய், வீர சாவர்க்கர் போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் என்று மட்டுமே இந்தப் புத்தகத்தில் நிரப்பப்பட்டிருக்க்கிறது.
கிட்டத்தட்ட 9 ஆயிரம் தனியார் மட்டும் சில அரசு பள்ளிகளுக்கும் இந்த புத்தகம் விநியோகிக்கப்பட்டு, இதனடிப்படையிலான வினாடி-வினா போட்டி ஒன்றும் உத்திரப்ப்ரதேச மாநிலத்தில் நடத்தப்படவுள்ளது.
வளரும் குழந்தைகளின் மனதில் மதப்பிராசாரத்தை முன்னெடுப்பதற்கான, மத வேற்றுமைகளை, மதப்பற்றை தூண்டும் வகையிலேயே இந்தப் பாடப்புத்தகம் செயல்ப்படுத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக