ஞாயிறு, 30 ஜூலை, 2017

லாலுவுடன் கைகோர்க்கும் ஐக்கிய ஜனதா தளம் ... சரத் யாதவ் துணை குடியரசு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக..

பாட்னா,பீஹார் அரசியலில், சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், முதல்வர் நிதிஷ் குமார் மீது, கடும் அதிருப்தியில் இருக்கும், ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர், சரத் யாதவை, தன் பக்கம் இழுக்க, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலை வர், லாலு பிரசாத் யாதவ், துாண்டில் வீசியுள் ளார். இதன்மூலம், நிதிஷ் குமாருக்கு நெருக்கடி கொடுக்க, அவர், வியூகம் வகுத்து வருகிறார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும்,முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ், 2004 - 09ல், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஊழல் செய்து, தன் மகன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட, குடும்பத்தினர் பெயர்களில் சொத் துக்கள் வாங்கி குவித்ததாக, சி.பி.ஐ.,அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன. மஞ்சியை வைத்து பாஜக காட்டிய ஆட்டம் நிதீஷுக்கு மறந்து விட்டது. அப்போது ஆபத்பாந்தவனாக நின்று கைகொடுத்த லாலுவின் முதுகில் குத்தியதற்கான தண்டனையிலிருந்து அவர் தப்ப முடியாது.


அதிரடி சோதனை
இதுதொடர்பாக, லாலு, பீஹார் முன்னாள் துணை முதல்வர், தேஜஸ்வி யாதவ் மற்றும், லாலுவின் குடும்பத்தினர் வீடுகளில், சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தியது. இதையடுத்து, 'லாலுவின் மகன், தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, நிதிஷ் குமார் கெடு விதித்தார்.
அவர் மறுத்ததை அடுத்து, சமீபத்தில், திடீர் திருப்பமாக, முதல்வர் பதவியை, நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, பா.ஜ., ஆதரவுடன், அவர், மீண்டும் முதல்வராக பதவி யேற்றார். இதையடுத்து, பீஹார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், அவர் வெற்றி பெற்றார்.
இந்த அதிரடி அரசியல் மாற்றங்களால், நிதிஷ் குமார் மீது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான, சரத்யாதவ், கடும் அதிருப்தி யில் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அவரது அதிருப்தியை, தனக்கு சாதகமாக பயன் படுத்தி, சரத் யாதவையும், அவரது ஆதரவாளர் களையும், தன் பக்கம் இழுத்து, நிதிஷ்குமாருக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியில், லாலு இறங்கியுள்ளார்.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர், சரத் யாதவ், எங்களுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவருகிறார். அவர், எங்களுடன், நெருக்கமான தொடர்பில்உள்ளார். நிதிஷ்குமாரின் நடவடிக்கைகளால், அவர், கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மதச் சார்பற்ற சக்திகளுக்கு, நிதிஷ் குமார் துணை போய் விட்டதாக, சரத் யாதவ் கருது கிறார்; விரைவில், அவர் நல்ல முடிவு எடுப்பார் என, நம்புகிறேன்.
மறைமுக திட்டம்
பீஹார் சட்டசபைத் தேர்தல் நடந்தபோது, பா.ஜ., வுக்கு எதிராக, மகா கூட்டணி அமைக்க வியூகங்கள் வகுத்துத் தந்த, பிரஷாந்த் கிஷோர், சமீபத்தில், தொலைபேசியில் பேசினார். அவருக்கு, நிதிஷ் குமாரின் மறைமுக திட்டங்கள் தெரிந்திருக்க வில்லை. இருப்பினும், 'நிதிஷின் நடவடிக்கை சரியில்லை' என, அவர் கூறினார்.
வரும், ஆக., 27ல், பா.ஜ.,வுக்கு எதிராக பேரணி நடத்த திட்டமிட்டோம். அதற்கான பிரசார போஸ் டர்களுக்கு பயன்படுத்த, புகைப்படம் தரும்படி, நிதிஷிடம் கேட்டோம். அதை தராமல் நிதிஷ் இழுத்தடித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. அதனால், ஏதோ செய்யப்போகிறார் என, முன் கூட்டியே யூகித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,வுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு அரசியல் நடத்தி வந்த நிதிஷ் குமார், சமீப காலமாக, காங்., உள்ளிட்ட, 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். சமீபத்தில், இந்த கட்சிகளின் கூட்டம், இரு முறை நடந்தபோது, நிதிஷ் குமாருக்கு பதில், மூத்த தலைவர், சரத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
'எதிர்க்கட்சிகளை ராகுல் இணைக்கணும்'
லாலுவின் மகனும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான, தேஜஸ்வி யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:பீஹார் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, மகா கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களை, நிதிஷ் குமார் மோசம் செய்து விட்டார். பா.ஜ.,வுக்கு எதிரான அனைத் துக் கட்சிகளையும், காங்., துணைத் தலைவர், ராகுல் ஒருங்கிணைக்க வேண்டும்.

ராகுல், மிகவும் பொறுப்பானவர். பா.ஜ.,வுக்கு எதிரான இந்த சவாலை அவர் ஏற்க வேண்டும். டில்லியில், சமீபத்தில், ராகுலை சந்தித்தபோது, இதுகுறித்து அவரிடம் பேசியுள்ளேன். பீஹா ரில், இப்போது சட்டசபைத் தேர்தல் நடந் தால், நிதிஷ் குமார், கண்டிப்பாக தோற்பார். பீஹார் இளைஞர்கள், நிதிஷை, இனியும் விரும்ப மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரவை விஸ்தரிப்பு

பீஹாரில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன், நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றார்; பா.ஜ.,வை சேர்ந்த, சுஷில் குமார் மோடி, துணை முதல்வர் ஆனார்.இந்நிலையில், நிதிஷ் தலைமை யிலான அமைச்சரவை நேற்று, விரிவுபடுத்தப் பட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, 14 பேரும், பா.ஜ.,வை சேர்ந்த, 12 பேரும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த ஒருவரும், பதவியேற்றனர்.

தே.ஜ., கூட்டணியை சேர்ந்த, பிற கட்சிகளுக்கு, அமைச்சரவையில் இடம் அளிக்கபட வில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில், விஜேந்திர பிரசாத், ராஜிவ் ரஞ்சன் சிங் லல்லன் உள்ளிட் டோரும், பா.ஜ.,வில், மங்கள் பாண்டே உள்ளிட் டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். எல்.ஜே.பி., சார்பில், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர், பசுபதி குமார் பரஸ் அமைச்சராக பொறுப்பேற்றார். பீஹார் சட்டசபை, 243 உறுப்பினர் பலம் உடையது. அரசியலமைப்பு விதிப்படி, 37 பேர் அமைச்சர் கள் ஆக முடியும். தினமலர்

கருத்துகள் இல்லை: