புதன், 2 ஆகஸ்ட், 2017

சமூக வலை :மோடியின் EMPTY இந்தியா திட்டம்! : அப்டேட்குமாரு


மோடியின் EMPTY இந்தியா திட்டம்! : அப்டேட்குமாருடாஸ்மாக் கடையை மூடுங்கன்னு ஆர்ப்பாட்டம், போராட்டம்னு பண்ணிகிட்டு இருந்தா சத்தமில்லாமல் ரேஷன் கடையை மூடுறாங்கன்னா உணமையிலேயே கவர்மென்ண்டுக்கு கேட்கலையா இல்ல கேட்காத மாதிரி நடிக்கிறாங்களாங்களா? மானியம் ரத்து, ரேசன் பொருள்கள் ரத்து, 28 % ஜி.எஸ்.டி. வரின்னு பா.ஜ.க போற போக்க பார்த்தா இந்த ஆட்சி முடியிறதுக்குள்ள காலைகடன் கழிக்க வரி, குழந்தை பெற்றால் வரி, மொத்தத்தில் உயிர்வாழவும் வரின்னு சொன்னா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. என்ன கொடுமை சார் இது? கடைசில இந்த அப்டேட்குமாரையும் சீரியஸா பேச வச்சிட்டாங்களே..ஏறுன பி.பியை அப்டேட் பார்த்து குறைச்சுக்கோங்க.
Prabakar Kappikulam
கடையில வரி அதிகமா போட்டா எப்படி வாங்குறது..?
வீட்டுல சமைச்சு சாப்பிடுங்க…
ரேசன் மானியம், கேஸ் மானியத்த கட் பண்ணா என்ன செய்யுறது..?
கோயில்ல பொங்கல் வாங்கி சாப்பிடுங்க…
இராம்கி திராவிட்
இந்த நாட்டின் உயரிய விருதுகள் பாரத ரத்னாவோ,பத்ம விபூசனோ அல்ல.....
தேசத்துரோகி பட்டம்தான்.....


Kozhiyaar
மழை காலத்தில் பல்லிளிக்கும் மாநகரத்து சாலை போலவே, நம் கஷ்ட காலத்தில் சில உறவுகளும்!!!
Karthick Ramasamy
ஒரு அரசு அதிகாரி அரசியல் செய்வதை அரசு வேடிக்கை பார்க்கிறது என்றால் அவருக்கு பின்புலமாக அந்த அரசே இருக்கலாம்.

Prabakar Kappikulam
சாராயக்கடையை மூடுங்கடான்னு போராட்டம் பண்ணுனா
ரேசன் கடைய இழுத்து மூடப்போறாங்களாம்…
Prabakar Kappikulam
வேளாண் மண்டலமா அறிவிங்கடான்னு கோரிக்கை வைச்சா
பெட்ரோலிய மண்டலமா அறிவிக்கிறாங்களாம்….
Villavan Ramadoss
-அந்த காங்கிரஸ்காரன் என்ன சொன்னான்.
-ரேஷன் இல்லைன்னு சொல்றார் சார்.
-அவன் யாரு அதை சொல்றதுக்கு, கேக்க ஆளில்லைன்னு நெனச்சிட்டானா?!?! இப்போ நான் சொல்றேன் உனக்கு ரேஷன் இல்ல போ. சும்மாதானே இருக்கே, போவும்போது வந்தே மாதரம்னு பாடிக்கிட்டே போ.

ஹரி ஹரன்
பாத்ரூம் கக்கூஸையும் சேர்த்து ஒரே ரூமா கட்டுங்கனு சொன்னால் கேட்டா தானே..
இதை கணக்கில் எடுப்பானுங்க ரேசன் அரிசி கிடையாதுனுவானுங்க
palanikannan
சிலிண்டர் விபத்திலிருந்து மக்களை காப்பாற்றவே மாணியம் ரத்து-தமிழிசை
"இந்த நியூஸ் பொய்தான், ஆனா அப்டி பேசற வாய்தான் அது"..
palanikannan
"டிஜிட்டல் இந்தியா, க்ளீன் இந்தியா"னு சொன்னாங்க,,
போற போக்க பார்த்தா
"EMPTY இந்தியா"வா மாறிடும் போல..

Villavan Ramadoss
வல்லரசு இந்தியால வசதியா இருந்தாதான் உயிர் வாழ முடியும்.
அப்படீங்களா.
இல்லையா பின்ன, வசதியா இருக்குறவனுக்கு ரேஷன் கொடுக்கக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.
சரிங்க..
நீங்க உயிரோடத்தானே இருக்கீங்க?
ஆமாங்க.
ஆக நீங்க வசதியாத்தான் இருக்கீங்க. அப்போ உங்களுக்கு எதுக்குஜி ரேஷன் பொருள் கொடுக்கணும்?
:ஜெய்ஹிந்த்.
Venpura Saravanan
கேஸ் சிலிண்டர் போடுபவர் 30 ரூபாய் டிப்ஸ் கேட்டால், போர்ஜரி கேஸ் போடுமளவுக்கு 'லா' பேசிவிட்டு...
"மோடிஜி நல்லா பண்றாரு"னு லாஜிக் பேசும் 'ஜீ'க்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்!

Inigo Pious
வானதி :- GST பிறகு அரிசி, பருப்பு விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.
புதிய தலைமுறை நிருபர் :- எந்த கடைனு சொன்னா நாங்களும் வாங்குவோம்.
வானதி : அதான் ஜெயலட்சுமி ஸ்டோர் ஜிஎஸ்டிக்கு முன் ஜிஎஸ்டிக்கு பின்னு விலைப்பட்டியலே போட்டிருந்தாங்களே.
பு த நிருபர் : அது போட்டோஷாப்புங்க.
drtamilisaibjp
சச்சின் வாலிபால்கூட விளையாடிருக்காப்ல. அதுக்காக சிலை வெச்சா, பேட்டை விட்டுட்டு வாலிபாலையா வைப்பாங்க. அவரு ரிலேட்டடா வெச்சு தொலைய வேண்டியது தான?

anjali_talks
ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..
nayagan_am
ரேசன்கடைபோல அளவாய் நீ
சிரித்தாலும்
மானியமாக உன் கோவம் உள்ளதென களித்திருந்தேனே
மொத்தமாக அத்தனையும் ரத்தாக்கி
என்னை பித்தாக்கிவிட்டாயே அன்பே

SaSha_Uno
ஏன்யா பிக்பாஸ் பிக்பாஸ்னூ எல்லாம் என்னேரமும் போட்டு அனத்திட்டு இருக்கீங்க?? ஊரோட ஒத்துபோகனுமே இப்ப என்ன நானும் இதைதா பேசனூமா omg
kiramaththan
பிக்பாஸ்: ஹவுஸ்மேட்ஸ், நீங்க எல்லாரும் ஆளுக்கு ஒரு பெரிய பொய்யா சொல்லணும், அதான் உங்க டாஸ்க். ஜூலி, நீங்க மட்டும் பெரிய உண்மைய சொல்லணும்!
ShivaP_Offl
5ஏக்கருக்குமேல இருந்தா, ரேசன்பொருட்கள் கிடையாதாம்
அப்ப 5 ஏக்கருக்கும் குறைவா இருந்தா, டாஸ்மார்க்ல சரக்கு இல்லைன்னு சொல்லமுடியுமா மைலார்ட்
கருப்பு கருணா
22 கோடி செலவில் வழங்கப்படவுள்ள ரேசனுக்கான ஸ்மார்ட் கார்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்..?
ஸ்டைலாக கீ செயின்ல மாட்டிக்கலாம்....
நகத்துல அழுக்கு எடுக்க பயன்படுத்தலாம்...
முதுகு சொரிய யூஸ் பண்ணலாம்..
பர்சுல பந்தாவா வச்சிக்கலாம்...
ரேசன்ல பொருள் வாங்குறத தவிர மீதி எல்லாத்துக்கும் பயன்படுத்திக்கலாம்...
சுப மஸ்த்து!
-லாக் ஆஃப் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: