பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை, டிடிவி தினகரன் புதன்கிழமை மாலை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,
அதிமுக அலுவலத்திற்கு எப்பொழுது முதல் செல்வேன் என்பதை நிச்சயம் தெரிவிப்பேன். அதிமுக கட்சிப் பணிக்காக நிச்சயம் செல்வேன். துணைப் பொதுச் செயலாளரை கட்சி அலுவலகத்திற்குள் செல்ல யாரும் தடை விதிக்க முடியாது. கடந்த 3 மாதங்களாக கட்சியில் செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. எனக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. ஒரு வாரம் கழித்து பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது அனைத்து விவரங்களையும் சொல்வேன். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடுவை ஆதரிக்கிறோம். சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா மீது வழக்கு தொடரப்படும் என்றார். நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக