லஞ்சம்
வாங்குவதும்,கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என பல விழிப்புணர்வு
மக்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், லஞ்சம் வாங்கும் பழக்கம் ஒழிந்தபாடில்லை.
இந்நிலையில், விஜயவாடாவில் லஞ்சம் தர மறுத்த பெண் மீது செவிலியர் ஆசிட்
வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை அடுத்த கிருஷ்ணா ஜில்லாவைச் சேர்ந்தவர் கிரிஜா பிரியா (22). அவருக்கு ஜூலை 15 ஆம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இவருக்கு அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் நடந்தது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பின்னர், பிரியாவுக்கு தையல் போட்ட இடத்தில் தொற்று ஏற்பட்டது. இதனால், அதே மருத்துவமனையில் அவர் கடந்த ஜூலை 28 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது,செவிலியர்கள் சிகிச்சையளிக்க வேண்டுமானால் எங்களுக்கு தலா 200 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். பிரியாவின் உறவினர்கள் ஆரம்பத்தில் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், அவர்களுக்கு 50 ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த செவிலியர் செரிபா, ஆசிட்டை எடுத்து வந்து பிரியாவின் மேல் வீசியுள்ளார். இதில் பிரியாவின் கை, கால்கள் காயம் ஏற்பட்டுள்ளது.
இதை எதிர்த்து பிரியாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காயமடைந்த அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விஜயவாடா காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக