வியாழன், 15 டிசம்பர், 2016

அர்விந்த் கேஜ்ரிவால் : மோடியின் படிப்பு சான்றிதழ்கள் போலியானது... நான் அவன்தான் ..

Whole country reeling under demonitization scandal. People want know educational qualifications of PM. Does he understand economy? Modiji degree case in Guj HC today. Modiji sends his best advocate Tushar Mehta 2 obtain stay on disclosur of degree? Why? Degree farzi?
மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது: ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஊழல்: கெஜ்ரிவால் ரூபாய் நோட்டு விவகாரத்தில் ரூபாய் 8 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறி வந்தநிலையில் தொலைநிலை கல்வி முறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக கூறுவது போலியானது.
ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பொருளாதாரத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு மோடி பெற்ற கல்வியறிவு என்ன? என கடுமையாக சாடியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்.
“மோடி என்ன படித்திருக்கிறார் என தெரிந்துள்ள மக்கள் விரும்புகிறார்கள். அவரால் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள முடியுமா?” என ட்விடியிருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

மோடியின் பட்டப்படிப்பு குறித்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. மோடி தன்னுடைய சிறந்த வழக்கறிஞர் துஷார் மேத்தாவை பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வெளியிட தடை கேட்க அனுப்பியுள்ளாரா? ஏன்? மோசடி பட்டம் என்பதால எனவும் கெஜ்ரிவால் ட்விட்டியுள்ளார்.

 நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: