timestamil
com: ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை திரும்பப் பெற்றபோது புதிய ரூபாய்
நோட்டுகளை அவசர அவசரமாக புழக்கத்தில் விட்டது ரிசர்வ் வங்கி. 2000 ரூபாய்
நோட்டுகள் சாயம் வெளுத்தன, 500 ரூபாய் நோட்டுகளில் முழுவதும் அச்சிடப்படாத
நோட்டுகள் சிக்கின. சர்ச்சைகளைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் உதிர்ந்து
விழும் நோட்டுகள், பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில்
ஏற்படுத்தியிருக்கின்றன.
கேரள மாநிலம் தலிபரம்பாவில் உள்ள ஃபெடரல் வங்கி கிளையில் 2000 ரூபாய் நோட்டுகள் ஐந்தை அதாவது ரூ. பத்தாயிரத்தை 13-ஆம் தேதி எடுத்து வந்திருக்கிறார் ஷரீஃபா. வீட்டில் வந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து பார்க்கும்போது அதில் ஒரு நோட்டு உதிர்ந்து விழ ஆரம்பித்திருக்கிறது.
மற்ற நோட்டுகளும் தொட்டால் விழும் நிலையிலே இருந்திருக்கின்றன. அதிர்ச்சி கொண்டு வங்கிக் கிளையை தொடர்பு கொண்டபோது அதை வாங்க மறுத்திருக்கிறது வங்கி.
பல மணி நேரம் வரிசையில் நின்று வாங்கிய இந்த ‘உதரும்’ பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார் அவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக