மக்கள் திலகம் எம்ஜிஆர் ..முத்தமிழ் அறிஞர் கலைஞர் இருவருக்குமான நட்பு எம்ஜிஆர் சாகும் வரை நீடித்தது ..!
எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்தது கூட சிலரின் உள்ளடி வேலைதான் என்று கூறுவார்கள்.சரி மேட்டருக்கு வருவோம்..!
எம்ஜிஆரைப் பொறுத்தவரை சைவ உணவோ..? அசைவ உணவோ..ஒரு பிடி பிடிப்பார்.சூட்டிங் என்றால் எம்ஜிஆர் வீட்டில் இருந்து ஐம்பது பேருக்கு உணவு வரும். அத்தனையும் வித விதமான அசைவ உணவு.
தான் என்ன சாப்பிடுகிறாரோ அதை லைட்மேன் கூட சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்.
அரசியல் விழா..கட்சிக்காரர்களின் திருமண விழா போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் கலைஞர் இல்லாமல் எம்ஜிஆர் என்றுமே சாப்பிட்டதே இல்லை.
அதே போல் கலைஞர், எம்ஜிஆரை விட்டு சாப்பிட மாட்டார். அப்போது எம்ஜிஆர் கலந்து கட்டி கேட்டு வாங்கி சாப்பிடுவார்.
ஆனால், கலைஞர் மிக நிதானமாக மிக குறைந்த அளவு உணவை சாப்பிடுவார்.
சைவ உணவுஎன்றால் மீன் மட்டுமே கேட்பார். அதிலும் குழம்பு மீன் மட்டுமே. ஓரு விருந்தில் எம்ஜிஆர் கலைஞர் அவர்களிடம் எனக்கும் இப்படி நிதானமாக சாப்பிட ஆசைதான். ஆனால், முடிய வில்லை..! இப்படி நிதானமாக சாப்பிடும் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். கண்டிப்பா நூறு வயசு உங்களுக்கு என்று கூற, அருகே இருந்த நாவலர் தற்செயலாக தும்மல் போட்டாராம். சிரித்த எம்ஜிஆர் நான் சொல்லலை.. வேணும்னா பாருங்க நீங்க நூறு வயசு வரைக்கும் இருப்பீங்க என்றாராம்…! தலைவரே..சீக்கிரமா வீட்டுக்கு வாங்க…!! லைவ்டே.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக