அதிமுக
தலைமைக்கும் அதிமுக-வின் ராஜ்யசபா உறுப்பினருமான சசிகலா புஷ்பாவுக்கும்
இடையே முரண்பாடுகள் உருவான பிறகு கட்சியை விட்டு ஒதுக்கப்பட்டிருந்தாலும்
மீண்டும் ஜெயலலிதா பற்றி பேசி வருகிறார் சசிகலா புஷ்பா.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை தொடர்பாகவும், அவரை மருத்துவமனையில் கவனித்துக் கொண்ட சசிகலா நடராஜன் பற்றியும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார். ஜெயலலிதாவின் கையெழுத்து தொடர்பாக கவர்னருக்கு கடிதமும் எழுதினார். இந்நிலையில், ராஜ்யசபாவில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கேள்வி எழுப்ப அவைத்தலைவருக்கு கேள்விகளை நோட்டீஸாகக் கொடுத்துள்ளார்.
எக்கட்சியையும் சாராத உறுப்பினராக ராஜ்யசபாவில் செயல்படும் சசிகலா புஷ்பா தனி நபர் என்பதால் முன்கூட்டியே கேள்விகளை அவைத்தலைவர் குரியனிடம் கொடுத்து முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும். அந்த வகையில் இரண்டு கேள்விகளை எழுப்புவதற்கான அனுமதி கோரி கடிதம் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான கேள்வி ஒன்றையும், இன்னொன்று ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டிக்கும் தமிழக அமைச்சரவைக்குமான தொடர்பு பற்றியும் கேள்வி எழுப்ப இருக்கிறார். மணல் குவாரி நடத்தி வந்த சேகர் ரெட்டி வீட்டில் கட்டுக்கட்டாக பணமும், தங்கமும் கைப்பற்றப்பட்ட நிகழ்வு இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தமிழக அமைச்சர்களோடு அவருக்கிருக்கும் தொடர்பு தொடர்பாக கேள்வி எழுப்ப உள்ளார். சசிகலா எழுப்பக் கேட்டுள்ள கேள்விகளுக்கு அவைத்தலைவர் இந்த தேதியில், இந்த நேரத்தில் பேச வேண்டும் என்ற அனுமதியைக் கொடுப்பார்.minnambalam,com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக