சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக உள்ளார் கதிரேசன். அவரது மனைவி மீனாட்சி. கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் தெரிவித்தனர். தனுஷும் அவரது தந்தையுமான கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர். இதனிடையே கதிரேசன் இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில் சன் தொலைக்காட்சியில் 'நிஜங்கள்' என்ற நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் நாளை தனுஷை உரிமை கொண்டாடும் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் கலந்து கொள்ள உள்ளனர். தனுஷ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் கலந்துகொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக