வியாழன், 15 டிசம்பர், 2016

நைஜீரியாவின் உண்மை நிலை என்ன? நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த நாடு


நைஜீரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக போகோஹராம் தீவிரவாதிகள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதலால் அந்நாட்டின் பல பகுதிகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நைஜீரியா அதிபர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக நடத்தி வரும் தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ‘போட்னோ’ மாகாணம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
போகோஹராம் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பால் 26 லட்சம் மக்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர்.
மேலும், 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சாப்பிடுவதற்கு உணவில்லாமல் 4 லட்சம் குழந்தைகள் பசியால் தவித்து வருகின்றனர்.
இந்த கடுமையான சூழலில், சர்வதேச நாடுகள் இவர்களுக்கு உணவு, மருந்து போன்ற அடிப்படையான உதவிகளைச் செய்து தரவிட்டால், 80,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா-வின் யூனிசெப் செயல் இயக்குநர் அந்தோனி லேக் தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கித் தவித்து வரும் குழந்தைகளுக்கு அடிப்படை உதவிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து நைஜீரியா அதிபர் முகமது புகாரி குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, ‘ஐ.நா-வும் தனியார் நிறுவனங்களும் நன்கொடை பெறுவதற்காக உண்மை மறைத்து வேறுவிதமாக கூறுகின்றனர்’ என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், போகோஹராம் தீவிரவாதிகளை தோற்கடித்து ஒரு வருடங்களாகி விட்டது. போகோஹராம் தீவிரவாதிகள் கைப்பற்றிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து அவர்கள் துரத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: