தனக்கு
துரோகம் செய்த சசிகலா உள்பட அவரது சொந்தங்கள் 14 பேரை 2011 டிசம்பரில்
கட்சியி லிருந்து நீக்கினார் ஜெயலலிதா. துரோ கக் குற்றச்சாட்டுக்
குள்ளானவர்கள் ஜெ. இருந்தவரை தலை காட்டவில்லை. ஆனால், ஜெ. இறந்த போது அவர்
தலை மாட்டில் சுற்றி நின்ற வர்கள் அவர்கள் தான். இதைப் பார்த்த அ.தி.மு.க.
தொண்டர்களும் நிர்வாகி களும் அதிர்ந்து போனார்கள். ஆனால், கடந்த 75
நாட்களாகவே அவர்கள் இப்படித்தான் வட்டமடிக்கிறார்கள் என்பது
கட்சியினருக்குத் தெரியாது.;
அப்பல்லோவில்
ஜெயலலிதா அட்மிட்டானதுமே ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட அத்தனை பேரும்
அப்பல்லோவில் குவிய, அவர்களை அரவணைத்தார் சசிகலா. அவர்களிடம் ஆலோசித்த
பிறகே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார். இதனை, "அப்பல்லோவைச் சுற்றும்
துரோகிகள்' என அட்டைப்படக் கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். மன்னார்குடி
சொந்தங்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் சிலரிடம் நாம்
பேசியபோது, ""அம்மாவின் உடல் போயஸ்கார்டனில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தது.
முறைப்படி சம்பிரதாய சடங்குகள் முழுமையாக நடக்கவில்லை. அப்போது,
சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அவரது குடும்ப வகையறாக்கள் பலரும்
கார்டனுக்குள் நுழைய முயற்சித்தனர். தனது கணவர் நடராஜனை மட்டுமே
அனுமதிக்கும்படி கார்டன் பாதுகாவலர் களுக்கு சசிகலா தரப்பில்
சொல்லப்பட்டது. மற்றவர்கள் அனுமதிக்கப்பட வில்லை.. அதேபோல ராஜாஜி ஹாலில்
உடல் வைக்கப்பட்டதும் அதனைச் சுற்றி தனது அக்காள், அண்ணன், தம்பி குடும்ப
வழிச்சொந்தங்கள் மட்டுமே இருக்க வேண்டும். கணவர் (நடராஜன்) வழிச்சொந்தங்களை
அனுமதிக்கக் கூடாது என சசிகலா சொல்லியிருந்தார்.
அம்மாவின் உடலைச்சுற்றி ஒரு பக்கம் சசிகலா, இளவரசி, சசியின் தம்பி திவாகரன், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், இவரது மனைவி கீர்த்தனா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் சூழ்ந்து கொண்டார்கள். உடலின் இடதுபுறம் இளவரசியின் மருமகன் ராஜராஜன், டாக்டர் சிவக்குமார், டி.டி.வி.தினகரன் நின்று கொண்டார்கள். இவர்களுக்குப் பின்புறம் நடராஜன். அதேபோல, அம்மாவின் தலைமாட்டில் மகாதேவனும் பாஸ்கரனும், கால்மாட்டில் கான்ஸ்டபிள் கோதண்டபாணியும் நின்று கொண்டார்கள். நடராஜன் உறவினர்கள் யாரையும் உடலுக்கு பக்கத்தில் அனுமதிக்க வில்லை இவர்கள். ஒரு கட்டத் தில் நடராஜனிடமும், "உங்களை இங்கே இருக்கக்கூடாதுன்னு அக்கா (சசி) சொல்றாங்க' என திவாகரன் சொல்ல, திடீரென மாயமான நடராஜன். ராஜாஜி ஹாலில் வெளிமாநில முதல்வர்கள் அமர்ந்திருந்த வி.வி.ஐ.பி. அறைக்குள் புகுந்து கொண்டார். அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சூர்யா, டாக்டர் சேதுராமன் உள்ளிட்ட பலரையும் கைகளைப் பிடித்து இழுத்து தள்ளினார்கள். தம்பிக்கோட்டையிலிருந்து சில ஆட்களை விவேக்கும் ஜெய் ஆனந்தும் அழைத்து வந்திருந் தனர். அவர்களும் கெடுபிடிகாட்டினார்கள். சசிகலா உள்ளிட்டவர்களை நீக்கும்போது, தனது பாது காப்புப் பிரிவில் (சி.எம். செக்யூரிட்டி) டி.எஸ்.பி. முதல் கான்ஸ்டபிள் வரை சசிகலாவால் நியமிக் கப்பட்டவர்களையும் பணியிலிருந்து தூக்கினார் அம்மா. அப்படி துரத்தியடிக்கப்பட்டவரில் இந்த கோதண்டபாணியும் ஒருவர். தற்போது இவர் திவாகரனின் வலதுகரமாக இருந்து வருகிறார். அம்மாவுக்கு துரோகமிழைத்தவர்கள் அனை வரையும் அம்மாவுக்கு பக்கத்தில் நிற்க வைத்து விட்டார் சசிகலா'' என சுட்டிக்காட்டினார்கள். ஜெ. உடலைச் சுற்றி நின்ற சொந்தங்கள் குறித்து உயரதிகாரிகளிடம் நாம் விசாரித்தபோது, ""முதல்வரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டி ருந்த சூழலில், ப்ரோட்டகால்படி எந்த நடை முறைகளையும் எங்களால் நிறைவேற்ற முடிய வில்லை. அதிகாரிகளை கேவலமாக நடத்தினார்கள். முதல்வரின் செயலாளர்கள் வெங்கட்ரமணன், சிவ்தாஸ்மீனா, அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ் ணன் மற்றும் அரசு செயலாளர்கள் கிருஷ்ணன், ராஜீவ்ரஞ்சன், அதுல்யமிஸ்ரா உள்ளிட்ட உயரதி காரிகள் ஒருவருக்கும் இங்கு இடமில்லைன்னு கோபமாக திவாகரன் சொல்லவும், ஜெ.வின் தலைக்கு மேலே இடதுபுறம் ராஜாஜி ஹாலின் காரிடாரில் போய் உட்கார்ந்துகொண் டார்கள். >அதேபோல தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், சில வி.வி.ஐ.பி.க்களை அழைத்து வரும்போது வழியே கிடைக்கவில்லை. அவரையே நெட்டித் தள்ளியது சசி தரப்பு. அதைப்பார்த்த சசிகலா, அருகிலிருந்த சிலரிடம் ஏதோ சொல்ல அதன் பிறகே தலைமைச்செயலாளர் கெடுபிடிகளிலிருந்து தப்பித்தார். அ.தி.மு.க. நிர்வாகி போல செயல்பட்ட பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சபீதாவுக்கு மட்டுமே மரியாதை கிடைத்தது. அறையில் உட்கார வைக்கப்பட்ட வி.வி.ஐ.பி.க்களுக்கு தேவையான வைகளை கவனிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார் சென்னை கார்ப்பரேசன் கமிஷனர் கார்த்திகேயன். வெளிமாநில முதல்வர்களிடம், "ஜெயலலி தாவை அரசியலில் வளர்த்துவிட்டவன் நான் தான்' என தன்னைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார் நடராஜன். "பிரசிடெண்ட் வந்துட்டாரா? பிரதமர் வந்துட்டாரா? ராகுல் காந்தி வந்துட்டாரா?' என யாரிடமோ கேட் டுக்கொண்டேயிருந்த நடராஜன், ராஜாஜி ஹாலுக்குள் அவர்கள் வரப்போகிறார்கள் என தகவல் கிடைத்ததும் வெளியே ஓடி வந்து அவர்களோடு இருப் பது போல பார்த்துக் கொண்டார்'' என் கின்றனர். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய் யப்படுவதற்கு முன்பு அவர் மீது போர்த்தப் பட்டிருந்த தேசியக் கொடியை மடித்து சசிகலாவிடம் ராணு வத்தினர் கொடுத்தனர். அதனை அருகில் இருந்த இளவரசியின் மகள் பிரியாவிடம் தந்தார் சசிகலா. இதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த ஜெயலலிதா பேரவை நிர்வாகி களிடம் பேசியபோது, ""தேசியக்கொடியை சசிகலா வாங்கியிருக்கக் கூடாது. சரி, அப்படியே வாங்கினார்னா, அதனை ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களிடம் கொடுத் திருக்கலாம். அதைச் செய்யவில்லை. கட்சிக்கு துரோகம் செய்தவர்களை முன்னிலைப்படுத்து கிறார் சசிகலா. கல்யாணத்திற்குக் கூட செல்லாமல் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட விவேக், அவரது மனைவி கீர்த்தனா உள்பட எல்லோரும் முன்னிலை பெற்றிருக்கிறார்கள். மொத்தத்தில், ஜெயலலிதாவுக்கு பிடிக்காத அத்தனை காரியங்களையும் அவரது இறப்பில் நடத்திக் காட்டிவிட்டார் சசிகலா'' என்று குமுறுகிறார்கள். தனது சொந்தங்களை நெருங்க வைத்து, தன் கணவர் சொந்தங்களை ஓரங்கட்டி சசிகலா சாம்ராஜ்ஜியம் நடத்தும் நிலையில், அப்செட் டான நடராஜன், மெரீனாவில் ஜெ. புதைக்கப் பட்ட இடத்தில் பேட்டி தரும் போது, "அ.தி. மு.கவை சாதா ரண தொண் டன்கூட காப் பாற்றிவிடுவான்' என பேட்டி கொடுத்துவிட் டுப் போனார். ஆனாலும் கட்சியைத் தன் மனைவி கண்ட் ரோலில் வைக் கவே விரும்பு கிறார். ஜெ. மரணத்தால் காலியாகியுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் சசி கலா போட்டி யிடவேண்டும் என காய் நகர்த்துகிறார் நடராஜன். பொதுச்செயலா ளர் பதவிக்கும் சசிகலாதான் சாய்ஸ் என்ற பேச்சை ஊடகங்கள் மூலமாக பலமாகக் கிளப்பி வருகிறார். ஜெ.வால் புறக்கணிக்கப்பட்டவர்களும் அவரது புகழ்பாடுவது அ.தி.மு.க.வில் வழக்கம். அது இப்போது சசிகலாவின் கணவர் தரப்பிலும் நடக்கிறது. <இரா.இளையசெல்வன் நக்கீரன்.இன்&

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக