திங்கள், 12 டிசம்பர், 2016

அனைத்து பஸ்களின் டயர்களிலும் காற்று இறக்கி விடப் படும்????? ஒரு முகநூல் கதை

ஒரு நாள் காலை. திடீரென ஒரு அறிவிப்பு.
பஸ்ஸில் போய்க் கொண்டிருப்பவர்கள் உடனே பஸ்ஸை விட்டு இறங்கிட வேண்டும். இன்னும் ஒரு மணி நேரத்தில், சாலையில் உள்ள அனைத்து பஸ்களின் டயர்களிலும் காற்று இறக்கி விடப் படும் என்று
மக்கள் பதட்டப் பட வேண்டாம். பின்னாடியே டெப்போவில் இருந்து புதுப் பேருந்துகள் வரும். பயணிகள் தாங்கள் ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டை புது பஸ்ஸில் காட்டி, பயணத்தைத் தொடரலாம் என அறிவிக்கப் பட்டது.
அதன்படியே எல்லா பயணிகளும் கீழே இறங்கி விட, எல்லா பஸ்களிலும் காற்று இறக்கி விடப் பட்டது.
ஏன் இந்த திடீர் முடிவு என கேட்டதற்கு பஸ் நிர்வாகி, ''டிக்கெட் எடுக்காமல் சிலர் கள்ளப் பயணம் செய்கிறார்கள். அவர்களை பிடிக்கத் தான். மக்கள் அதிக பட்சம் ஐம்பது நிமிடம் பொறுமை காத்தால், நல்லது'' என்றார்.
ஆகா.. என்ன ஒரு அதிரடி திட்டம்... இத்தனை ஆண்டுகளாக யாரும் செய்திராத புரட்சி.. இப்படி சிலர் பாராட்டு மழை பொழிந்தார்கள்.

இனி பாருங்கள். டிக்கெட் எடுக்காதவர்களால் பயணத்தை தொடர முடியாது. ரோட்டில் நிற்க வேண்டியது தான். என கற்பனையில் வாழ்த்தினார்கள்.
ஆனால்...
மக்கள் பஸ்ஸை விட்டு இறங்கி அரை மணி நேரம் ஆகிவிட்டது. மாற்றுப் பேருந்துகள் வரவே இல்லை.
வந்த ஒன்றிரண்டு பஸ்ஸும் கூட அதிகம் பேருக்கு பயன் இல்லாத மினிபஸ் தான்.
வெயிலில் நின்ற பயணிகளில் நூற்றுக் கணக்காணோர் சுருண்டு விழந்து இறக்கும் நிலை வருவதைக் கண்ட பஸ் நிர்வாகி...தற்போது ''மக்களே. பஸ் இல்லாப் பயணத்திற்கு பழகிக் கொள்ளுங்கள்'' என்கிறார்.
பஸ் நிர்வாகமும், பஸ்ஸிற்காக காத்திருக்காதீர்கள். ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸிகளை பயன் படுத்துங்கள் என சொல்ல ஆரம்பித்து விட்டது.
இதென்ன முட்டாள்தனம் என யாராவது கேட்டால், ''டிக்கெட் எடுக்காதவர்களால் பஸ் நிர்வாகியின் உயிருக்கு ஆபத்து'' என்கிறார்கள்.
இந்த திட்டத்தை குறை சொல்பவர்கள், ''கள்ளத்தனமாக பஸ்ஸில் பயணிப்பவர்களை ஆதரிப்பவர்கள்'' என்று கூறி அவமதிக்கிறார்கள்.
இன்னும் சிலர் நாட்டுக்காக ஐம்பது நிமிடம் நிற்கக்கூடாதா? கபாலி படம் பார்க்க, ஜியோ சிம் வாங்க நிற்கவில்லையா? என்கிறார்கள்.
இன்னும் சிலரோ.. எல்லையில் ராணுவ வீரர்களைப் பாருங்கள். என தேசபக்தி ஏற்றுகிறார்கள்.
வசதி படைத்தவர்கள் ஓலா கேப், பாஸ்ட் டிராக் டாக்ஸிகளில் செல்ல. ..
வசதியற்ற அப்பாவிப் பயணிகள் இன்னமும் புது பஸ் வரும் என்ற நம்பிக்கையில் நடுரோடில்.. முகநூல் பதிவு திராவிட கிளி sumi b

கருத்துகள் இல்லை: