வெள்ளி, 16 டிசம்பர், 2016

முத்தரசன் :ஜெ’ மரணத்தில் மர்மம் இல்லை! எவ்வளவு தந்தாய்ங்க? அத்த சொல்லுவீங்களா?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், போயஸ் இல்லத்தில் வசித்துவரும் சசிகலவை சந்தித்து ஆறுதல் கூறினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலர் முத்தரசன். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அறிக்கைவாயிலாக பல கேள்விகளை எழுப்பியிருக்கும் நிலையில், அந்த அறிக்கையை ஆதரித்து திமுக பொருளாளர் ஸ்டாலினும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதை தன்னால் ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநிலஸ் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
புயல் தாக்குதல்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏற்பட்ட புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை மின்சாரம் கிடைக்கவில்லை. குடிநீரும் வழங்கப்படவில்லை. கடுமையான அவதிக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்கள் முறிந்தது, மின் கம்பங்கள் சரிந்தது பற்றி அரசு தெரிவித்த கணக்கைக் காட்டிலும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது.

ரூ.500 கோடி நிதி
இவற்றை சீரமைக்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் சென்னைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு தங்க இடமும், உண்ண உணவும் முறையாக வழங்க மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். புயல் சேத பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக மாநில அரசு தற்போது ரூ.500 கோடி நிதி வழங்கியுள்ளது. மத்திய அரசிடமிருந்து இதுவரை நிதி வந்து சேரவில்லை. எனவே, புயல் பாதிப்புகளை மத்திய நிபுணர் குழு சென்னைக்கு வந்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். சீரமைப்பு பணிக்கு தேவையான நிதியை உடனே வழங்க வேண்டும். நடுத்தர மக்களின் வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
கோடி, கோடியாக
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் சாதாரண ஏழை மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்புப் பணம் வைத்திருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களிடம் மட்டுமே கோடி, கோடியாக புதிய ரூபாய் நோட்டுகள் உள்ளன. பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. இது, ஏன் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். பணம் மாற்றவும், பணம் எடுக்கவும் வங்கிகளில் வரிசையில் காத்திருந்த அப்பாவி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதுபற்றி பிரதமரோ, துறைசார்ந்த மந்திரியோ பதில் அளிக்கவில்லை. இவ்வாறு பதில் அளிக்காமல் இருப்பது ஏன்? என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு சாதாரண மக்களை தண்டித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.
ஜெயலலிதா மரணத்தில்
ஜெயலலிதா இறந்தது அதிமுக-வுக்கு பேரிழப்பு. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எடுத்த முடிவுகளில் உறுதியாக இருந்தார். திடமான நடவடிக்கைகளால் பெயர் எடுத்தார். அவரது உடல் நிலை குறித்தும், மரணம் பற்றியும் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆதாரம் இன்றி அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறுவதை என்னால் ஏற்க முடியாது. ஜெயலலிதாவின் இழப்பை பயன்படுத்தி கட்சியையும், ஆட்சியையும் தனதாக்கிக்கொள்ள நினைப்பது அரசியல் நாகரீகமாகாது.
காவிரி மேலாண்மை வாரியம்
தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள அரசு மத்திய அரசுடன் இணக்கமானநிலையில் இருப்பதால் மத்திய அரசை வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: