திங்கள், 12 டிசம்பர், 2016

ரூ.17,000 கோடி முதலீடு வெளியேறியது

இந்திய கடன் சந்தையில் இருந்து நடப்பு டிசம்பர் மாதத்தில் இதுவரையில் ரூ.17,000 கோடி அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. மாறாக இந்திய பங்குச்சந்தையில் இந்த மாதம் ரூ.138 கோடி ரூபாய் புதிதாக முதலீடு வந்திருக்கிறது. கடன் சந்தையை பொறுத்த வரை கடந்த 11 மாதங்களில் 7 மாதங்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்றிருக்கின்ற னர். டிசம்பரில் இதுவரை ரூ.17,392 கோடி வெளியேறி இருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது கடந்த அக் டோபர் மாதத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அமெரிக்க தேர்தலில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால் அக்டோபர் மாதம் வெளியேறியது. நவம்பர் மாதம் நிறுவனங்களின் வருமானம், பண மதிப்பு நீக்கம் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறையும் என்னும் கணிப்பு, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந் தெடுக்கப்பட்டது ஆகிய காரணங் களால் நவம்பர் மாதம் அந்நிய முதலீடு வெளியேறியது.

 நடப்பாண்டில் இதுவரை இந்திய பங்குச்சந்தையில் ரூ.28,881 கோடி அந்நிய முதலீடு வந்திருக்கிறது. மாறாக இந்திய கடன் சந்தையில் இருந்து ரூ.42,101 கோடி வெளியேறி இருக்கிறது. tamilthehindu.com

கருத்துகள் இல்லை: