செவ்வாய், 13 டிசம்பர், 2016

ஜெயலலிதா தனது தங்கை மகள் அம்ருதாவுக்கு கூறியது : நான் கூண்டு கிளி மாதிரிதான் இருக்கிறேன்!


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல குறைவால் கடந்த 5ம் தேதி காலமானார். அவரது சிகிச்சையில் பல்வேறு மர்மம் நீடித்து வரும் நிலையில், கர்நாடகாவில் வசிக்கும ஜெ.,யின் தங்கை மகள் அம்ருதா சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில்,‘‘ ஜெயலலிதா அம்மா, எனது அம்மாவுடன் கூட பிறந்த சகோதரி. இந்த விசயத்தை எனக்கு 16 வயது வரை என் பெற்றோர்கள் என்னிடம் கூறவில்லை. தெரிந்த பிறகு நான் அவரை சந்திக்க சென்றேன். பல முறை சென்றபோது சசிகலா என்னை ஜெ.,அம்மாவை பார்க்க அனுமதிக்க வில்லை. அம்மாவிற்கு உடல் நலம் சரி இல்லை இப்போது பார்க்க முடியாது என, மூன்று முறை செக்யூரிட்டி வைத்து என்னை திருப்பி அனுப்பினார். சசிகலா அம்மாவுடன் இல்லாத நாட்களில், அம்மாவை நேரில் சந்தித்தேன். என்னிடம் எங்கள் குடும்பம் பற்றி அன்புடன் விசாரித்தார். அவரை பற்றி கேட்டபோது கண்ணீர் வடித்தார். ஜெ.,அம்மாவின் முகமும் என்னுடைய முகமும் ஒரே சாயலில் இருக்கிறது என பலரும் என்னிடம் கூறியுள்ளனர். ஜெ.,அம்மா மருத்துவமனையில் இருந்த போது அவரை பார்க்க எவ்வளவோ முயற்சி செய்தும் சசிகலா தடுத்து விட்டார். அப்படி என்ன மருத்துவமனையில் ரகசிய சிகிச்சை என்று தெரியவில்லை. அவரது சாவில் மர்மம் இருக்கிறது. அதை அரசு தரப்பில் விசாரிக்கவேண்டும். ஜெ.,அம்மாவின் சொத்திற்கு ஆசைப்பட்டு, சசிகலா எனது அம்மாவிற்கு ஸ்லோ பாய்ஷன் கொடுத்த விஷயம் உண்மையாக இருக்கும். அவர் அம்மா பெயரை பயன்படுத்தி பல ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார். எனக்கு, ஜெ.,அம்மாவின் சொத்தில் ஒரு பைசா கூட தேவையில்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. அவர் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர், சேவை செய்தவர். அவரது சொத்துகளை அரசு எடுத்து கொண்டு, மக்களுக்கு நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். பன்னீர்செல்வம் தனது ஜாதியினர் என்பதால் முதல்வராக்கியுள்ளார் சசிகலா. அ.தி.மு.க.,தலைமைக்கு சசிகலா வருவதை தமிழக மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள், என கண்ணீருடன் பேட்டியளித்தார்

கருத்துகள் இல்லை: