ஜெ. முதல்வரா வரவேண்டுமென மக்கள் ஓட்டுப்போட்டார்களே தவிர நடுவுல சசி வருவார்ன்னு இல்ல:
சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னை அண்ணாநகரில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரு பெண் முதல் அமைச்சர். எந்த நாட்டுக்கும் கிடைக்காத ஒரு பெருமை. இந்தக் கட்சிக்காக எவ்வளவு போராடி வந்தவர் ஜெயலலிதா.
அவர்களுடைய சாவு மக்களால் இவ்வளவு பேசப்படனுமா. நல்லதா பேசப்பட வேண்டும். அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். ஆனா மக்கள் என்ன பேசிக்கிறாங்க. என்னமோ நடந்திருச்சி. அம்மாவின் சாவில் மர்மம் இருக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். நானும் நினைக்கிறேன். ஒவ்வொரு வீட்டில் இருக்கும் மக்களும் இதனை பேசுகிறார்கள்.
இதில் யார் பூனைக்கு மணி கட்டுவது. ஒரு விசாரணை நடத்த வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை விட மாட்டேன். மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக வரவேண்டுமென ஓட்டுபோட்டார்களே தவிர, நடுவுல சசிகலா நடராஜன் கட்சியை தூக்கனும், வேறாவது முதலமைச்சராகனும் என்று ஓட்டுப்போடவில்லை.
அம்மாவின் பேஸ்க்கு கிடைத்த ஓட்டு. வேற யாரையாவது நிக்க வைச்சா இவ்வளவு ஓட்டு விழுந்திருக்குமா. கட்சியில எல்லாருமே குமுரிபோய் இருக்கிறார்கள்.
அடுத்த என்ன செய்யலாம் என கட்சிக்காரங்க தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். அண்ணா, எம்ஜிஆர் மறைவின்போது மருத்துவ அறிக்கையில் ஒரு தெளிவு இருந்தது. மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. போட்டோ மற்றும் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவித்தார்கள். ஜெ. மரணத்தில் மர்மம் இருக்கிறது. சசிகலா குடும்பத்தால்தான் ஆட்சியை இழந்தார்கள். சுதாகரன் திருமணத்தால் ஆட்சியை இழந்தார்கள். பிறகு சொத்துக்குவிப்பு வழக்கு. சொத்துக்குவிப்பு வழக்கு அம்மாவுக்கு ஏன் வந்தது. இந்த வழக்கில் ஏன் சசிகலா நடராஜன், இளவரசி சேர்க்கப்பட்டார்கள். என் குடும்பம் துரோகம் செய்தது என்று சசிகலா நடராஜன் கூறினார்களே.
அம்மாவின் சடலத்தை சுற்றி யாருங்க நின்னா. கட்சிக்காரங்களே காணும். முதல் அமைச்சர் முதற்கொண்டு எல்லாரும் அடிமை மாதிரி கீழே உட்கார்ந்திருக்கிறார்கள். என் கணவர் எல்லாம் துரோகம் செய்தார் என்று கூறினாரே, தகனம் செய்யப்பட்ட இடத்தில் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்.
அம்மா உயிரோட இருந்திருந்தா இவர்களையெல்லாம் சேர்த்திருப்பீர்களா. ஒருவர் இறந்திட்டா என்ன வேண்டுமானாலும் செய்யலாமா. மனசாட்சி இல்லையா. கட்சிக்காரங்கள் அங்கங்க கொதிக்கிறாங்க. அப்போ சட்ட ரீதியாக போராடினால்தான் வெற்றி பெற முடியும். இவ்வாறு கூறினார்.நக்கீரன்,இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக