திங்கள், 12 டிசம்பர், 2016

தொடர் பொய்களை கூறிய அப்போலோ +சசிகலா + பாண்டே போன்ற ஊடகங்கள் ... டாக்டர் புகழேந்தி


ஜெ. 2 முறை தண்ணீர் வாங்கிக் குடித்    தார். வேக வைத்த ஆப்பிள் பழங்களை சாப்பிட்டார்.

* பிசியோதெரபி சிகிச்சையால் ஜெ. நன்றாக பேசுகிறார். சில நாட்களில் வீடு திரும்புவார். * எழுவதற்கு பயிற்சி எடுக்கிறார். சாதாரண வார்டுக்கு மாற்றத் திட்டம்.* எலெக்ட்ரானிக் கருவிகள் மூலம் அரசு அதிகாரிகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்- அ.தி.மு.க. சீனியர் தலைவர் பொன்னையன்.* "வழக்கமான உணவை சாப்பிடுகிறார். எப் போது டிஸ்சார்ஜ் ஆகவேண்டும் என்று ஜெய லலிதாவே முடிவு செய்வார்'- அப்பல்லோ ரெட்டி.

* ஓய்வு என்பது நான் அறியாதது. உழைப்பு என்னை விட்டு நீங்காதது. நான் மறுபிறவி எடுத்துள்ளேன்- ஜெ. கையெழுத்திட்ட அறிக்கை.

* அறையில் இருந்தபடி டி.வி. பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்கிறார்.

* மூன்று தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யால் ஜெயலலிதா உற்சாகம். ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை டி.வி.யில் பார்த்தார்.


* ""90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார். மிகுந்த வலிமை, மனவலிமை படைத்தவர் அவர். எப்போது வீட்டுக்குப் போகவேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்''. -அப்பல்லோ ரெட்டி>அ.தி.மு.க. தொண்டர்களின் அடக்கமுடி யாத கோபத்திலிருந்து தப்பிக்க… சசிகலா தரப்பும் அப்பல்லோவும் பல்வேறு வேலைகளில் இறங்கி யிருக்கின்றன. "முதல் அமைச்சரின் உடல்நிலை  முன்னேற்றம்  அடைந்துகொண்டிருக்கிறது,… திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்,… உட்கார ஆரம்பித்துவிட்டார்,…எழுந்து நடப்பதற் கான பயிற்சிகளை கொடுத்துக் கொண்டிருக் கிறோம்'…என்றது அப்பல்லோ அறிக்கை. அதைத் தொடர்ந்து சசிகலா தரப்பின் அறிவுறுத்தல்படி அப்பல்லோவும் அ.தி.மு.க நிர்வாகிகளும் பலவிதமாகக் கதையளந்தனர். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அப்பல்லோ வாசலில் தொடங்கி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் நம்பிக்கைக் கேற்றபடியே ஒவ்வொரு நாளும் தகவல்கள் வெளியிடப்பட்டன. பூரண நலம்பெற வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார் ஜெயலலிதா. "ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்' -சி.ஆர். சரஸ்வதி. காவிரி விவகாரம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற உள்ள கூட் டத்தில் முதல்வர் ஆற்றவேண்டிய உரையை தலைமைச் செயலாளர் வாசிக்க உள்ளார். இந்த உரையை ஜெ. சொல்ல சொல்ல அதிகாரிகள் தயாரித்தனர். ; >இவையெல்லாம் தொண்டர்களின் நம்பிக்கை யை அதிகரிக்கச் செய்தது. கடந்த செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோவில் ஜெ. அட்மிட் ஆனபோது எந்தத் தொண்டரும் நேரில் பார்க்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 74 நாட்களில் ஒருமுறைகூட ஜெ.வின் முகத்தை பார்க்கமுடிய வில்லை. அவரின் குரலையாவது கேட்கமுடியாதா என்கிற ஏக்கம் தொண்டர்கள் மத்தியில் பரவியது. <>அப்பல்லோ  மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர் வாகிகளின் அறிக்கைகள், பத்திரிகை ஊடகங்களின் செய்திகளைப்பார்த்து, "விரைவில் அம்மா குணமாகி இரட்டை விரலை அசைத்து புன்னகையோடு போயஸ்தோட்டம் செல்வார்' என்று நம்பிக்கை யோடு காத்திருந்த தொண்டர்களுக்கு முகம்  தெரியாதபடி அமரர் ஊர்தியில் ஜெ.-வின் உடல் சென்றதை இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை. "அம்மாவ கொன்னுட்டீங்களே' என்ற அப்பாவித் தொண்டர்களின் குரலை அப்பல்லோ வாசலிலும் போயஸ் தோட்டத்திலும் ராஜாஜி ஹாலிலும் கேட்க முடிந்தது.

முழுமையாகக் குணமடைந்ததாக சொல்லப் பட்டவருக்கு "கார்டியாக் அரெஸ்ட்' ஏற்பட வாய்ப்புண்டா என்பது பற்றி மருத்துவ அறிவியல் ரீதியான சந்தேகங்களை எழுப்புகிறார் மக்கள் மருத்துவர் டாக்டர். வீ. புகழேந்தி.""நான் சந்தேகம் எழுப்புவதற்கு மிக முக்கியக்காரணம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு வெளிநாட்டில் தரப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சையை, சென்னையிலும் தரவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டபோது, மருத்துவக் குழுவில் இருந்த எனது ஆசிரியர்  டாக்டர் திரு. ஆர். சுப்பிரமணியம் இதை வன்மை யாக எதிர்த்தார். ஏற்கனவே உரியளவு கதிர்வீச்சு தரப்பட்டுள்ள நிலையில், கூடுதலாகத் தந்தால் பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார். மீறி தந்தார்கள்.  அண்ணாவின் இருதயத்தைச்சுற்றி நீர் கோர்த்து (Radiation induced pericarditis) அவர் இறக்க நேரிட்டது.  கதிர்வீச்சு சிகிச்சை தராமல் இருந்திருந்தால் ஒருவேளை மேலும் சிலகாலம் அண்ணா அவர்கள் நம்முடன் வாழ்ந்திருக்கக்கூடும். அப்படி, மருத்துவ அறிவியல் ரீதியான குறை பாட்டால் முன்னாள் முதலமைச் சர் செல்வி. ஜெயலலிதா  அவர்கள் இறந்திருப்பாரோ என்கிற சந்தேகங்களுக்கு விடையளிக்கப்படாமல் இருப்ப தால் எனக்குள் ஆதங்கமும், சோகமும், மனவேதனையை உண்டாக்கி என்னை தூங்க விடாமல் செய்கிறது.  சில தினங்களுக்கு முன்பு அப்பல்லோ அறிக்கையில் முதல்வர் பூரண குண மடைந்துவிட்டார் எனவும் அவருடைய உறுப்புகள் (நுரையீரல் உட்பட) அனைத்தும் நன்றாக  செயல் படுகின்றன என்றும் அறிக்கை வெளியாகியிருந்தது. உறுப்புக்கள் நன்றாக செயல்படும் நிலையில் வெண்ட்ரிகுலர் டேக்கே கார்டியா (ventricular tachycardia), வெண்ட்ரிகுலர் ஃபிப்ரிலேஷன் (ventricular fibrillation) பிரச்சினை ஒருவேளை வந்திருக்கலாம் என பிரபல எய்ம்ஸ் மருத்துவமனையின் இருதயத்துறை நிபுணர்கள் சந்தேகம் எழுப்பும் நிலையில்... அதை உறுதிப்படுத்தும் வகையில் அப்பல்லோ அறிக்கையில் எந்தத் தகவலும் இல்லை. மேலும், இவ்வாறு  திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் வருவது வழக்கமான ஒன்றல்ல. தொலைக்காட்சிகள், இருதயத்துடிப்பு சீராக  40 நிமிடங்கள் ஆனதாக செய்தி வெளியிட்டன. அப்படியெனில் மூளைச்சாவு ஏற்படுவதை தடுத்திருக்க வாய்ப்புகள் மிகக்குறைவே.  ஏனெனில், 5 லிருந்து 8 நிமிடங்கள்தான் நமது மூளையால் இரத்த ஓட்டமின்றி  உயிர்வாழ இயலும். அப்படியெனில், இ.சி.எம்.ஓ. பொருத்தப் பட்டது உண்மையா? பொதுவாக, மூளைச்சாவு ஏற்படுவதை தடுக்கவே இ.சி.எம்.ஓ. கருவி பொறுத்தப்படும். நள்ளிரவு 12:15 மணிக்கு வெளியான அப்பல்லோ அறிக்கையில் முதல்வரின் உடம்பிலுள்ள  பிற காரணங்களால் (under line conditions) காப் பாற்றமுடியாமல் போன தாக உள்ளது.  அந்த காரணங்கள் என்ன என்பது துளியளவுகூட விளக்கப்படவில்லை. பகல் நேரத்தில் செயற்கை சுவாசம்  அளிக்கப்படவில்லை என்று முந்தைய அப்பல்லோ அறிக்கையிலேயே உள்ளது. ஆனால், செயற்கை சுவாசத்தை மாற்றியமைத்த பிறகே கார்டியாக் அரெஸ்ட் வந்தது என ஆங்கில நாளிதழில் அப்பல்லோ மருத்துவர் ஒருவர் கருத்து கூறியுள்ளார்'' என்றார் ஆதங்கத்தோடு. அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, ""முதல்வர் அட்மிட் ஆனதிலிருந்தே செயல்பாடின்மைதான் நிலவியது. பேசி சிரித்தார், பாராட்டினார், பந்து விளை யாண்டார், டீ குடிக்கக் கூப்பிட்டார், பிலேவிடமே "நான்தான் பாஸ்' என்றார் என்றெல்லாம் அப்பல்லோ நர்ஸுகள் சிலாகித்து பேசுவதாகத் தற்போது வெளியிடப்படும் செய்திகள் எல்லாமே, அ.தி.மு.க தொண்டர்களின் கோபா வேசத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளத் தான்'' என்கிறார்கள் ரகசிய குரலில்.""ஜெ.வின் மரணத்தில் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் கோபங் களையும் சமாளிக்கவே டாக்டர்களை ஆங்கிலப் பத்திரிகையாளர்களிடம் பேச வைத்திருக்கிறது அப்பல்லோ நிர்வாகம். ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது, அதற்கான சிகிச்சை செய்கிறோம் இ.சி.எம்.ஓ. எந்திரத்தில் உடடினயாக ஜெ.வை இணைக்கவும் எல்லாம் முடிந்துவிட்டது'' என்கிறார்கள் டாக்டர்கள். ""கார்டியாக் அரெஸ்ட்டுக்குப் பிறகு, ஜெ., திடீரென ஒரு அதிர்ச்சிக்குள்ளாகி நாக்கு வெளியே தள்ளி இறந்து போனார். ராஜாஜி ஹாலில் ஜெ.வின் உடல் அருகே நின்றி ருந்த சசிகலா, கோட் அணிந்த ஒருவரிடம் இதை விளக்கியுள் ளார்'' என்கிறார்கள் அப்பல்லோ வட்டாரத்தினர்.ஜெ. மரணத்தின் மர்மங்கள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியுள்ளன. அவரை இ.சி.எம்.ஓ. கருவியில் இணைக்கும் முன்பே அவரது மூளை செயல்பாடுகள் குறைந்து நினைவை இழந்தார். நாடித்துடிப்பு குறைந்துகொண்டே போனபோது தான் அப்பல்லோ உரிமையாளர் பிரதாப் ரெட்டி யின் மகள் சங்கீதா ரெட்டி, "ஜெ. இனி பிழைக்க முடி யாது' என்ற அர்த்தத்தில் டிச.05ந் தேதி டுவிட்டரில் பதிவு செய்தார். ஏற்கனவே அவரை பாதித்த ஹெமி பிளீஜியா என்ற பக்கவாதம் மூளையைத் தாக்க... ஜெ.வுக்கு ஏற்கனவே ஏற்பட்ட செப்டிக் ஷாக் போன்ற அதிர்ச்சியில் நாக்கு தள்ளி வாய் திறந்து உயிரிழந்தார். இதை ஊடகங்களுக்கு ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரிகள் சொல்ல, 5:30 மணிக்கே செய்தி வெளியானது. ஆனாலும் தங்களது முயற்சி யை கைவிடாத டாக்டர்கள் சிலர் ஜெ.வுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க முயன்று தோற்றுப் போனார்கள்'' என்கிறார்கள் அப்பல்லோ தரப்பில்.செப்டம்பர் 22-ந் தேதி அட்மிட் செய்யப் பட்டதிலிருந்தே ஜெ. இனி செயல்படமுடியாது என்பது உறுதியாகிவிட்டது. அதை மறைத்து, "முன் னேறி வருகிறார்' என்றனர். ஜாதகப்படி டிசம்பர் 5 வரை அவருக்கு தசா புத்தி நிலை ஆபத்தாக இருக் கிறது என ஜோதிடர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். அதன்பிறகு நல்ல நேரம் அமையும் என எதிர் பார்த்தவர்களுக்கு, ஜெ.வின் உடல்நிலை நம்பிக்கை தரவில்லை. எனவே டிசம்பர் 4-ல் சீரியஸ் என அறி வித்து, டிசம்பர் 5-ல் அவர் மரணம் அறிவிக்கப்பட் டது. அவருக்கு ராசியான எண்-5. அதனால் இரவு 11:30 மணிக்கு இறப்பு என்று அறிவிக்கப்பட்டது. அதன் கூட்டுத் தொகையும் 5தான். மொத்தத்தில்.  செப்டம்பர்- 22 முதல் டிசம்பர்-5 வரை நடந்தது எல்லாமே செட்டப்தான்’’என்கிறார்கள் போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.

-தாமோதரன் பிரகாஷ், ஈ.பா.பரமேஷ், மனோ நக்கீரன்.இன் 

கருத்துகள் இல்லை: