திங்கள், 12 டிசம்பர், 2016

வர்தா புயலின் மையப் பகுதி கரையை கடந்தது. புயலின் கிழக்கு பகுதி கரையை கடக்கிறது

Vardah cyclone starts making landfall சென்னை துறைமுகம் அருகே வர்தா புயலின் மையப் பகுதி கரையை கடந்தது. புயலின் கிழக்கு பகுதி கரையை கடந்து வருகிறது. வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் நண்பகல் 12 மணிக்கு சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியது. இந்நிலையில் புயலின் மையப் பகுதி 3 மணிக்கு கரையை கடக்கத் துவங்கியது. Vardah cyclone starts making landfall அதிதீவிர வர்தா புயலின் மேற்குப் பகுதி சென்னை அருகே கரையை கடந்துவிட்டது. புயலின் மையப்பகுதி 3 மணிக்கு துவங்கி 4 மணிக்குள் சென்னை துறைமுகம் அருகே கரையை கடந்தது. வர்தா புயலின் கிழக்கு பகுதி தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மரக்காணம் வரை காற்றின் வேகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.30 மணியளவில் அதிதீவிரம், தீவிர நிலையில் இருந்து புயலாக குறையும். இரவு 11.30 மணிக்கு அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறையும். புயல் கரையை கடந்தாலும் இரவு 7 மணி வரை அதன் தாக்கம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்  tamiloneindia.com


கருத்துகள் இல்லை: