கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி
மருத்துவமனைக்கு நேற்றிரவு
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,
பாமகவின் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்
நேரில் வந்து நலம் விசாரித்தனர்.இன்று காலை 11 30 மணிக்கு ராகுல்
காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவரைத்
தொடர்ந்து மூத்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக்கண்ணுவும் நலம்
விசாரித்து சென்றார். அதிமுக எம்.பி. தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார்
ஆகியோரும் நேரில் வந்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்து உடல் நலம் பெற்று வீடு
திரும்ப வாழ்த்து கூறினர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வைகோ 7 மணிக்கு சென்றார். அப்போது அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வைகோ, மருத்துவமனைக்குள் கால் வைக்கக் கூடாது என்று கத்தி கூச்சலிட்டனர்.
வைகோ வாகனம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். பல தொண்டர்கள் செருப்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு வைகோவைப் பார்த்து காட்டினர். அங்கு வந்த போலீசார் வைகோவை பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டனர். வைகோவை துரோகி என்றும் கூச்சலிட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வைகோ, உடனடியாக காரில் ஏறி திரும்பி சென்றார். திமுகவினர் அநாகரீகமாக நடந்து கொண்டு அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது. tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக