உச்சகட்ட போரில் சிக்கி தவிக்கிறது கோபாலபுரம்..! ஒரு புறம் கலைஞரை தனது வீட்டுக்கு கூட்டிப் போக முடியாமல் தவிக்கும் ராசாத்தியம்மாள்..!
இன்னொரு புறம் கனிமொழிக்கு தனது அரசியல் எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற பயம்.!? தளபதிக்கு கட்சியைக் கட்டிக் காத்து மீண்டும் திமுகவை அரியணையில் அமர வைக்க பகீரத முயற்சி.
மதுரை அண்ணன் எப்படியும் கலைஞர் இருக்கு போதே கட்சியில் நிலையான இடத்தில அமர்ந்து விட வேண்டும் என்கிற தவிப்பு.
இதற்காக அவர் செல்வி மூலம் காய் நகர்த்தி வருவது.. தயாநிதிமாறன் யார் பக்கம் அணி சேர்வது என்கிற தவிப்பு.
திமுகவின் ஏழு அறக்கட்டளையின் சொத்துகள் யாருக்கு என்கிற போட்டாபோட்டி என்று உச்சகட்ட குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது கோபாலபுரம்..!?
கலைஞர் எப்படியும் அழகிரியை கட்சியில் சேர்த்தே ஆக வேண்டும் என்று முடிவே எடுத்து விட்டார். ஆனால் தளபதி அசைந்து கொடுக்கவே இல்லை.
இதனால் குடும்பத்தினர் அதிக அளவில் ஆத்திரம் கொண்டனர்..! கலைஞரோ இனி காலம் தாழ்த்த முடியாது. நீ அறிவித்து விடு அல்லது நானே அறிவித்து விடுவேன் என்கிறார்.
அதிர்ந்து விட்டார் தளபதி. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அறுபது ஆண்டுகால திமுக பாரம்பரியத்தை கட்டிக் காக்க போராடுகிறார் தளபதி. அதற்கு குடும்பமே தடையாக இருக்கிறது.
நொந்து போய் உள்ளார்கள் தொண்டர்கள்..!! லைவ்டே.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக