அமெரிக்காவில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரம் துவங்கிய முதல் நாளில் இருந்து ஹெச்-1பி
விசா வழங்குதல் குறித்துத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவு
செய்து வந்தார்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பின், முதல் முறையாக விசா குறித்து டொனால்டு டிரம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஐடி நிறுவனங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளது. டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை முக்கியக் கூட்டத்தில் அமெரிக்கக் குடிமக்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பரித்து வெளிநாட்டைச் சேர்ந்த மக்களுக்கு அளிக்கும் வழக்கத்தை நிறுவனங்கள் கைவிட வேண்டும் எனக் கூறினார், அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டோர் மத்தியில் டிரம்ப் இவ்வாறு பேசினார்.
மேலும் அவர், இத்தகைய நடவடிக்கைகள் இனி நாங்கள் நடக்க விடமாட்டோம் எனவும் திட்டவட்டமாகக் கூறினார் டிரம்ப். இதுமட்டும் அல்லாமல் லூசியானா பகுதியில் உள்ள பாடன் ரூக்-இல் நடந்த இக்கூட்டத்தில், டிரம்ப் அமெரிக்கர்கள் வேண்டுமென்றே வெளியேறி பிறநாட்டவர்களைப் பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் டொனால்டு டிரம்ப் எச்சரித்தார்.
ஆனால் அவர் எந்த நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. பதவிக்கு வந்த உடனேயே லேபர் அமைச்சகத்தை முறேகேடாக விசாக்களைப் பெற நிறுவனங்கள், அமெரிக்க ஊழியர்களை வெளியேற்றிவிட்டுக் குறைந்த சம்பளத்தில் பிற நாட்டவர்களைப் பணியில் அமர்த்திய நிறுவனங்களை ஆய்வு செய்ய உத்தரவிட உள்ளேன் என்றும் கூறினார்.< இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்குப் பின் திங்கட்கிழமை வர்த்தகத்தைத் துவங்கிய மும்பை பங்குச்சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது. திங்கட்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் இன்போசிஸ் நிறுவனம் என்எஸ்சி குறியீட்டில் 2.44 சதவீதமும், டிசிஎஸ் 1.47 சதவீதமும் சரிவைடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ், விப்ரோ, போலாரீஸ், சுபெக்ஸ், என முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சந்தித்தது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக