புதன், 14 டிசம்பர், 2016

அனைத்து சொத்துக்களையும் 16 வருடங்களுக்கு முன்பே ரத்த உறவுகளுக்கு உயில் எழுதிவிட்டார் ஜெயலலிதா !


முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கும் சொந்தம் என்ற விவகாரம் பற்றி பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களில் முக்கியமானவை சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லம். கொடநாடு எஸ்டேட். ஹைதராபாத் திராட்சை தோட்டம். இவை அனைத்தும் நமது எம்.ஜி.ஆர். பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட்டிற்கு கீழ் உள்ளதாம். இதன் அலுவலகம் ஐதராபாத் பஷிராபாத் ஜெ.ஜெ.கார்டன் என்ற முகரில் இருந்ததாம். சசிகலா குடும்பத்தினர் இதன் நிர்வாகிகளாக இருந்த நிலையில், அவர்களின் நடவடிக்கையில் தொடர்ந்து எழுந்த சந்தேகங்கள் காரணமாக அந்த டிரஸ்ட்டின் நிர்வாகிகளை அதிரடியாக வெளியேற்றினாராம் ஜெயலலிதா. இதற்காக கடந்த 2000 ஆம் ஆண்டில் அவரே நேரடியாக ஐதராபாத் சென்று ரிஜிஸ்ரேசன் அலுவலரை அழைத்து, தனது ரத்த உறவினர்கள் அடங்கிய பிரைவேட் கமிட்டியை அமைத்தாராம். அவர்கள் யார் என்ற விபரங்களை பதிவாளர் அலுவலகம் வெளியிட மறுப்பதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகனும், ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ராஜசேகர ரெட்டி நடத்தும் சாக்ஷி பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்தில் உள்ள தனது சொத்தை, அவரின் உறவுக்கார பெண் ஒருவருக்கு எழுதி வைத்துள்ள விவகாரம் தற்போது வெளியே கசிந்துள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு போயஸ் கார்டன் வீடு மட்டுமில்லாமல், கொடநாடு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அவருக்கு சில சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்துக்கள் யாருக்கும் செல்லும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் மேச்சல் பகுதியில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உயில் ஒன்று உள்ளது. அந்த உயில் 2000ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது. ஜெயலலிதா நடிகையாக இருந்த போது, ஹைதராபாத் பேட்பஷிராபத் எனும் பகுதியில் உள்ள ஜி.டி.மெட்லா எனும் இடத்தில் 4 ஏக்கரும், ஹோம்பள்ளி எனும் இடத்தில் 7 ஏக்கர் நிலமும் வாங்கியுள்ளார். ஜெ.ஜெ. கார்டன் என பெயரிடப்பட்ட அந்த நிலத்தில் காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அந்த தோட்டத்தில் ஒரு விருந்தினர் இல்லமும் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தைத்தான் ஜெயலலிதா தனது ரத்த சொந்தத்தில் உள்ள ஒரு உறவுக்கார பெண்ணின் பெயரில் எழுதி வைத்துள்ளார். அவர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சார் பதிவாளர் அந்த உயிலுடன் பல முறை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ஆனால், அந்தப் பெண் குறித்த தகவலை சார் பதிவாளர் அலுவலகம் வெளியிட மறுத்துவிட்டது. சம்பந்தப்பட்ட அந்த பெண் வந்து கேட்கும்போது அந்த உயிலை கொடுத்து விடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அந்த இடம் தற்போது மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு ராமகிருஷ்ண ராஜூ என்பவர் காய்கறி மற்றும் எலுமிச்சை பழங்களை பயிர் செய்துள்ளார். 2007ம் ஆண்டு ஜெயலலிதா அந்த தோட்டத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை சென்றுள்ளார். ஆனால், அதன்பின் அவர் அங்கு செல்லவே இல்லை.  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை: