நியாயமாக ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடித்த, விசுவாசமாக இருந்த ஊடகங்கள்தானே
75 நாட்கள் அப்பல்லோ மர்மத்தை விடாப்பிடியாக தோண்டித் துருவ வேண்டும்?
மாறாக ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்த நக்கீரன், சில ஆங்கில தொலைக்காட்சிகள்,
பத்திரிக்கைகள்தான் அவரது மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை
வெளிக்கொணர தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இருக்கும்போது ஜெ
புகழ்பாடிய ஊடகங்களும் குனிந்து கும்பிட்ட முதுகுகளும் மறுநாளே
புனைப்பெயர்களை களைந்துவிட்டு அடுத்த தலைவி ‘சின்னம்மா’ என்று அடுத்த சுற்று குனிய தயாராகிவிட்டன.
பணிவு, மரியாதை, விசுவாமெல்லாம் ஜெயலலிதாவுக்கு அல்ல, அதிகாரத்திற்கு
மட்டும்தான் என்பது புரிகிறது. இருந்தாலும் இவ்வளவு எளிதில் ஜெயலலிதாவும்
அவரது மரணமும் தாண்டிச்செல்லப்படுவது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
மருத்துவமனைக்குச் சென்ற நாளில் இருந்து வெறும் அறிக்கைகளில் மட்டுமே
படிக்க முடிந்த ஜெயலலிதாவின் வாழ்வு, இறந்த உடலாகத்தான் வெளிஉலகத்திற்கு
வந்தது. எனில் இது ஜனநாயக நாடுதானா என்றும் கேள்வி எழுகிறது.
ஒரு சாமானியனின் வாழ்வு குறித்த அச்சம் எழுகிறது. எண்ணற்ற சந்தேகங்கள் எழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால் நிச்சயம் ஏதோ ஒருநாள், ஏதோ ஒருவகையில் அத்தனை உண்மைகளும் வெளியில் வந்துவிடும் என்று மனது சொல்கிறது. வரலாறு திரும்பத் திரும்ப அதை நிரூபித்தும் வந்திருக்கிறது. உண்மையின் ஒரே பலம் அதை மறைக்க முடியாததுதான் !! முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக