சென்னை: வெள்ளை அறிக்கை விட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனதால் மக்கள் கடந்த 2 மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார்கள்.
வங்கிகளில் ரூ.2 ஆயிரத்திற்கு அதிகமாக பணம் தருவது இல்லை. ஆனால் சேகர் ரெட்டியிடம் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் அதுவும் கோடிக் கணக்கில் இருந்தது எப்படி?
தனியார் வங்கிகள்
தனியார் வங்கிகள்
மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பி வைக்கிறது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தெருமுனை பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.
சொத்துக்கள் சொத்துக்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதில் பல சொத்துக்கள் சிலரின் வசம் உள்ளது. அவற்றை மீட்க கட்சி சார்பில் சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு அமைக்கப்படும். ஜெயலலிதா ஜெயலலிதா ஜெயலலிதாவின் திடீர் மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை புகழ் பெற்றது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர் என அனைவருமா பொய் சொல்கிறார்கள்? அனைவரும் பொய் சொல்கிறார்கள் என நான் நம்பவில்லை.
வெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கையோ, கருப்பு அறிக்கையோ வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா? அவரின் மரணம் பற்றிய வதந்திகள் தேவையில்லாதவை. மதுக்கடைகள் மதுக்கடைகள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூரண மதுவிலக்கே காங்கிரஸ் கட்சியின் கொள்கை ஆகும். முதலில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக