வெள்ளி, 16 டிசம்பர், 2016

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உரிமம் ரத்து!


ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்தியாவில் பல அரசு சார தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து அதிகளவில் நன்கொடை பெற்று வருகின்றன. இந்நிலையில், நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்படி, உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் ,அதை பல்வேறு வகையில் முறைகேடாகப் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதன்படி,இந்தியாவில் செயல்பட்டு வரும் பல தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது,வெளிநாட்டு நன்கொடையை பெறுவதற்கு, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்படி உரிமம் பெற வேண்டும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அப்படி பெறப்பட்ட உரிமத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் கிரீன்பீஸ் இந்தியா, சமூக ஆர்வலர் டீஸ்டா செடால்வாட் நடத்தும் சப்ரங் டிரஸ்ட், சிட்டிசன்ஸ் பார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் ஆகிய மூன்று தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை வருகின்ற ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு புதுப்பித்தது.
ஆனால், புதுக்கப்பிட்ட உரிமத்தை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது. தவறுதலாக உரிமம் புதுப்பிக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.மேலும், மேற்கூறிய மூன்று நிறுவனங்களும் வெளிநாட்டு நன்கொடையை பெற முடியாது என விளக்கம் அளித்தனர்.  minnambalam,com

கருத்துகள் இல்லை: