ஜெயலலிதா போயஸ் கார்டனில் வசித்த போது அவருக்கு துணையாக அவ்வப்போது வந்துசெல்பவர்தான் சந்திரலேகா.இவரின் மூலம்தான் சசிகலா கேசட் கொடுக்க போயஸ் கார்டனுக்குள் சென்றார்.
ஜெயலலிதா நீ யார் உன் கணவர் யார் என்று கேட்டபோது எம்.என். நடராஜன் அண்ணா, கருணாநிதி, ஆகியோருடன் நெருக்கமானவர். மாணவ திமுகவில் பதவி வகித்தவர். அதனால்தான் பி.ஆர்.ஓ. பதவி கிடைத்தது என்று கூறினார்.
சந்திரலேக தமிழகம் முழுவதும் தெரிவதற்கு எனது கணவரே காரணம் என்று கூறினார். இதனையடுத்து எம்.என். நடராஜன் ஜெயலலிதாவை சந்திக்க ஏற்பாடு நடந்தது. அவரும் சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு அறிமுகமாகவே இருந்தது.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா இருந்தாலும் அவரை எம்.ஜி.ஆர் கண்காணித்து கொண்டே தான் இருந்தார்.
புதியதாக ஒரு பெண் தோட்டத்திற்கு செல்கிறார் என்று தகவல் வர அவர் யார் அழைத்து வாருங்கள் என்று கூறினார் எம்.ஜி.ஆர். நடராஜன் தனது மனைவி சசிகலாவுடன் ராமவரம் தோட்டத்திற்கு சென்றார். திமுகவில் நடராஜன் இருந்ததால் எம்.ஜி.ஆருக்கு ஏற்கனவே அவரை தெரிந்து இருந்தது. எம்.ஜி.ஆர் சசிகலாவுக்கு ஒரு அசைமென்ட் கொடுத்தார். அது என்ன வென்றால் ஜெ வை யார், யார் சந்திக்கின்றனர் என்பதை உடனுக்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.இனி நீ ராமவரம் தோட்டத்திற்கு எந்த நேரத்திலும் வரலாம் என்றும் கூறினார்.
அந்த சமயத்தில் அதிமுகவில் ஜெயலலிதா கலந்து கொண்ட கூட்டத்திற்கு அதிகமான தொண்டர்கள் குவிவதை பார்த்த நடராஜன் தனது மனைவியிடம் இனி ஜெயலலிதாவுக்கு எதிராக எதுவும் எம்.ஜி.ஆரிடம் கூறவேண்டாம் என்று தெரிவித்தார். அன்று முதல் எம்.என். நடராஜனின் பேச்சை அப்படியே கேட்டு, ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியானார் சசிகலா. அன்று எம்.ஜி.ஆருக்கு அல்வா கொடுத்தவர்தான் சசிகலா.
பின்னா் ஜெயலலிதா உடனே இருந்து அவரையும் அமுக்கினாா். அதிமுக ஜெ கட்டுப்பாட்டில் வந்த அன்றும் கணவர் நடராஜனின் சொல்படிதான் அதிமுக இயங்கியது. இனியும் அப்படிதான் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. கணவரையே பார்க்கமாட்டேன், பேசமாட்டேன், கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார் சசிகலா. ஆனால் நடராஜன் சொல்படி தான் நடந்தார்.
எம்.ஜி.ஆருக்கே கொடுக்கப்பட்ட அல்வா. அதிமுக தொண்டர்களுக்கு கூடவா கொடுக்க முடியாது. ஜெயலலிதாவையே அமுக்கிய சசிகலாவால் அதிமுகவையா அமுக்க முடியாது என்று அதிமுக சீனியா்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.லைவ்டே.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக