
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின்னர் வங்கிகளோ, ஏ.டி.எம்-களோ மக்களின் தேவையில் சரிபாதியைக்கூட பூர்த்தி செய்யவில்லை. அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கே மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று அரசு வங்கி ஊழியர்கள் குற்றம் சுமத்திய நிலையில் மக்கள் திண்டாடி வந்தனர்.
இப்போது மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு நமது தொலைதொடர்புகள் இன்னும் தயாராகவில்லை என்பதை உணர்த்தியிருக்கிறது வர்தா. புயல் வருவதற்கு முன்பே ஏ.டி.எம்-களும், வங்கிகளும் செயலிழந்துவிட, புயல் மக்களின் வாழ்வையும் புரட்டிப் போட்டுவிட்டது. புயல் வீசிய நேற்று (12-12-2016) அன்று மாலை 6 மணிக்குமேல் மக்கள் பொருட்கள் வாங்க கடைகளுக்கு வந்தபோது எந்த ஒரு கடையிலும் மின்னணு ஸ்வைப்பிங் மிஷின் வேலை செய்யவில்லை. பெட்ரோல் பங்குகள், வணிக நிறுவனங்கள், மருந்துக் கடைகள் என ஸ்வைப்பிங் மிஷின்களும் வேலை செய்யாமல், கையில் பணமும் இல்லாமல் மக்கள் முடங்கிப் போனார்கள். இன்று (13-12-2016) அன்று மிலாது நபி அரசு விடுமுறை என்பதால் மக்களின் இடர்பாடுகள் இன்னும் அதிகரித்திருக்கிறது. பணமில்லாத பொருளாதாரம் என்ற மோடியின் அறிவிப்பை, தொலைதொடர்புகளை செயலிழக்கச் செய்த வர்தா கேள்விக்குள்ளாக்கியுள்ளது.மின்னம்பலம்,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக