செவ்வாய், 13 டிசம்பர், 2016

75 ஆண்டுகளுக்கு பின் இதுதான் மிகப்பெரிய புயல்- சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் மழை தொடரும்!

சென்னை: அதிதீவிர வர்தா புயல் சென்னையைத் தாக்கி கரையைக் கடந்த நிலையிலும் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்கிழக்கு வங்க கடலில் உருவான அதிதீவிர வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரை இருந்தது. Cyclone Vardah: Rains continue in TN coastal வலுவாக கரையை கடந்தது வர்தா புயலின் மையப்பகுதி பகல் 2.45 மணி முதல் மாலை 5 மணி வரை கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும்போது வலுவாகவே கடந்துள்ளது. இன்றும் மழை புயல் கரையை கடந்த பின் வலுவிழந்ததால் காற்றின் வேகம் மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வரை இருந்தது.
புயல் கரையை கடந்தாலும் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இன்று பல இடங்களில் மழை பெய்யும். கனமழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். 75 ஆண்டுக்கு பின்... 1941-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையை அதிதீவிர புயல் தாக்கி உள்ளது. அதற்கு பின்னர் 75 வருடங்களுக்கு பிறகு இப்போது புயல் தாக்கி உள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார். tamiloneindia.com

கருத்துகள் இல்லை: