சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை திங்கள்கிழமை முதல் காணவில்லை
என்று பெங்களூரைச் சேர்ந்த ஜெயலலிதாவின் தங்கை எனக் கூறிக் கொண்ட சைலஜா
மகள் அமிர்தா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா. இவரது சகோதரர் தீபக்தான் ஜெயலலிதாவுக்கு சசிகலாவுடன் இணைந்து இறுதி சடங்குகளை செய்தவர்.
அதிமுக தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தீபாதான் தலைமை ஏற்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களில் ஒரு பிரிவினர் வலியுறுத்துகின்றனர். தீபாவும் தாமே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு எனவும் போர்க்கொடி தூக்கியிருந்தார்
இந்த பஞ்சாயத்துக்கு நடுவே தற்போது தீபாவை காணவில்லை என்ற புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகாரை தெரிவித்திருப்பவர் பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா.< ஜெயலலிதாவின் தங்கை என அவ்வப்போது ஊடகங்களில் அடிபட்ட பெங்களூர் சைலஜாவின் மகள்தான் இந்த அமிர்தா. ஜெயலலிதாவின் பெற்றோர் ஜெயராமன் - சந்தியா தம்பதியினருக்கு பிறந்த கடைசி மகள்தாமே என்றும் தாயார் சந்தியார் தன்னை ஆர்ட் டைரக்டர் பி.தாமோதரப் பிள்ளையிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டார் என்றும் கூறி வந்தவர் சைலஜா. இவர் கடந்த ஆண்டு காலமாகிவிட்டார். இந்த சைலஜாவின் மகள் அமிர்தா "பெங்களூர் மிர்ரர்" ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
தீபாவும் நானும் நீண்டகாலமாக தொடர்பில் இருந்து வருகிறோம். என்னுடைய பெரியம்மா ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அதிகமான தொடர்பில் இருந்து வருகிறோம். சசிகலா தொடர்பாக தீபா தம்முடைய கருத்துகளைத் தெரிவித்த நிலையில் நாங்கள் இருவரும் சந்தித்து இப்பிரச்சனையை கையிலெடுக்க முடிவு செய்திருந்தோம். இது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னையில் உள்ள தம்முடைய வீட்டுக்கு வருமாறு தீபா அழைத்திருந்தார். தீபா அழைத்ததைத் தொடர்ந்து சென்னைக்கு நான் திங்கள்கிழமையன்று வந்தேன். ஆனால் தீபாவின் வீடு பூட்டப்பட்டுள்ளது. அவரது வீட்டு வேலையாட்களும் அங்கு இல்லை. அவரது செல்போனுக்கு திங்கள்கிழமை முதல் தொடர்பு கொண்டு வருகிறேன். ஆனால் அவரது போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறது. சசிகலாவை விமர்சித்த நிலையில் தீபா எங்கிருக்கிறார் என தெரியாதது அச்சத்தை ஏற்படுத்துகிறது. தீபா பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அமிர்தா கூறியுள்ளார். இருப்பினும் தீபா தொடர்பான அமிர்தாவின் தகவல்கள் உறுதியானவையானதா என தெரியவில்லை. சென்னையை புயல் புரட்டிப் போட்ட நிலையில் 3 நாட்களாக தொலைத் தொடர்பு சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது; இதனால் தீபாவின் செல்போன் தொடர்பு கிடைக்காமல் போனதா என்பது குறித்தும் தெரியவில்லை. tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக