வெள்ளி, 28 ஜூன், 2019

பாலியல் வன்கொடுமை.. 4 வயது சிறுமி! கழிவறைக்குள் சடலமாக மீட்பு.... ஒய்வு பெற்ற ராணுவ பெரியப்பா ?

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி! கழிவறை வாளிக்குள் இருந்து சடலமாக மீட்புtamil.news18.com : வீட்டில் 4 வயது மகளை தனியாக விட்டுச்சென்ற தாய், திரும்பி வந்த போது மகளை சடலமாக காண வேண்டிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. தன் மகள் பாலியல் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அந்த தாய்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையையடுத்த, திருமுல்லைவாயிலில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் உள்ள அந்தோணி நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கணவர் பணிக்குச் சென்றுவிட, அவரது மனைவி, 4 வயது மகள், 8 வயது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார்.< மாலை நேரத்தில் மகனை டியூசனுக்கு அழைத்துச் சென்ற தாய், சிறுமியை வீட்டில் தனியாக விட்டுச் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை. தகவலறிந்து வந்த கணவர், மனைவியுடன் சேர்ந்து சிறுமியை தேடியபோது, வீட்டின் கழிவறையின் ஒரு ஓரத்தில் கண்ட காட்சியால் அப்படியே உறைந்து போயுள்ளனர்.
< அதன் பின்னர் வாளிக்குள் கிடந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது சிறுமி உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் மேலும் மகளை பறிகொடுத்த தம்பதியின் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். அப்போது விசாரணையில், குழந்தையின் பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. 60 வயதான அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: