மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை கையகப்படுத்த தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற சென்னை கிண்டி மண்டல வருவாய் அதிகாரி சார்பில் செய்தி நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவோர் 2 மாதத்திற்கு உள்ளதாக தெரிவிக்கலாம் என்று ஆர்டிஓ கூறியுள்ளது.

ஜெயலலிதாவின் வீட்டுக்கு சட்டப்பூர்வமான வாரிசு யார் என்பதை இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டி உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில எடுப்பினால் எந்த ஒரு குடும்பமும் மறு குடியமர்வு செய்ய தேபை எழவில்லை என்பதால் மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு அலுவலர் எவரும் தனியே நியமிக்கப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பின்படி அரசு நினைவிடமாக மாற்றம் செய்யும் காரணத்திற்காக நில எடுப்பு செய்யப்பட உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.