மின்னம்பலம் :
அமமுகவில்
தங்க தமிழ்ச்செல்வன்- தினகரன் உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் நடத்தும்
உரையாடல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரம் அமமுகவில்
இன்னொரு ஆடியோ வெளியாகாமலேயே பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அமமுகவின் மண்டலப் பொறுப்பாளரான பழனியப்பனுக்கு அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி, குறிவைத்திருப்பதாக மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அமமுகவின் முக்கியப் பிரமுகரான செந்தில்பாலாஜி போலவே பழனியப்பனையும் தங்கள் பக்கம் கொண்டுவர திமுகவும் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், ஸ்டாலின் மருமகன் சபரீசன் டீம் சேர்ந்து, அமமுக முக்கிய பிரமுகரான தங்கத்தைச் சந்தித்து, ’திமுகவுக்கு வாருங்கள் உங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் உங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளையும் உங்களிடம் ஒப்படைக்கிறோம்’ என்று திமுக நடத்திய பேச்சுவார்த்தையை, நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில், அதிமுகவுக்கு எஸ், திமுகவுக்கு நோ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் அமமுக முக்கிய நிர்வாகிகள் மத்தியில் இப்போது ஒரு ஆடியோ உலாவருவதைப் பற்றி விசாரித்தோம்.
அமமுக முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் பழனியப்பனிடம், செந்தில் பாலாஜியும், சபரீசனும் பேசியுள்ளார்கள். ‘நீங்கள் திமுகவுக்கு வாருங்கள். நீங்கள் சொல்பவருக்கு அல்லது உங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கிறோம். மேலும் உங்கள் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உங்களிடம் ஒப்படைக்கிறோம். அதற்கு நீங்களே வேட்பாளர்களைத் தேர்வுசெய்து, தேர்தல் செலவுகளையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அந்தப் பேச்சுவார்த்தை பழனியப்பன் செல்போனில் பதிவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள் அமமுக பிரமுகர்கள்.
ஏற்கனவே ரஜினி மக்கள் மன்றம் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவராக இருந்த மதியழகன் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். மா பேக்ட்ரி, கிரானைட் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளார் இவர்.
கிருஷ்ணகிரி மாவட்ட திமுக மாவட்டச் செயலாளராகவும் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துவரும் செங்குட்டுவனிடம் பெரிய அளவில் பொருளாதாரம் இல்லை. அதனால் அவரிடம் உள்ள மாவட்டச் செயலாளர் பதவியை மதியழகனுக்குக் கொடுத்தும் 3 சட்டமன்றத் தொகுதிக்கும் பொறுப்பும் தேர்தல் செலவுகளையும் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது திமுக தலைமை என்கிறார்கள் கிருஷ்ணகிரி திமுக நிர்வாகிகள். இவரோடும் இந்த மூவரணி பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக