செவ்வாய், 25 ஜூன், 2019

சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

Kalai Mathi /tamil.oneindia.com :  சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது வீட்டில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் கோடிக் கணக்கில் கைப்பற்றப்பட்டன. 
இதுதொடர்பான வழக்கில் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த புகார் தொடர்பாக சிபிஐ சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 3 வழக்குகளை பதிவு செய்தது. ஒரே குற்றத்துக்காக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சேகர் ரெட்டி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. 
இதனை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை ரத்து செய்துள்ளது. சேகர் ரெட்டியின் நண்பர்கள் மீதான வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சேகர் ரெட்டி மீதான ரூ.8 கோடி மற்றும் 1.6 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 24 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்குகள் மட்டுமே சேகர் ரெட்டி மீது தற்போது நிலுவையில் உள்ளது.

Kumaran Karuppiah : டெல்லி மேலிடத்திற்கு கமிஷன்கள் கொடுத்து செட்டில் செய்து விட்டார்கள் போல..
சேகர் ரெட்டி வீட்டுல புது கரன்சி 33 கோடி பிடிச்சாங்க தெரியுமா.. அப்போ பணமதிப்பு செஞ்சிருந்த சீசன்.. அந்த பணம் 33 கோடி எல்லாம், சேகர் ரெட்டி சொத்து வித்து வந்த பணம், எல்லாமே கணக்கு சரியா இருக்குன்னு
இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் அந்த வழக்கை நேற்று முடிச்சிடுச்சு..
இதுல முக்கியமான விஷயம்,
நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது..,
அந்த பணமிழப்பு சீசன் அப்போ வங்கியில் ஒரு ஆளுக்கு வெறும் 4000 ரூபாய் மட்டும் தான் கொடுப்பாங்க.. அப்படி இருக்கும் பொழுது 33 கோடி ரூபாயும் புத்தம் புது 2000 நோட்டு கரன்சி எப்படி வந்துச்சுன்னு ஒருத்தனும் கேட்கல.. பக்கா பிராடுத்தனம் இல்லாம அது நடந்திருக்க வாய்ப்பே இல்லை தானே...
கேனப்பய ஊருல..
கிறுக்குப்பய நாட்டாமை..

கருத்துகள் இல்லை: