வியாழன், 27 ஜூன், 2019

பெரியார் வீடியோக்களுக்கு (youtube) பெரியாரியர்களே தடையாக உள்ளார்கள்?

மணி அமுதன் மா.பா : பெரியாரை
வென்றெடுக்க வேண்டும் என்று உண்மையாக நினைக்கின்றவர்களுக்கு மட்டும்...
நாதகவில் துரை முருகன் என்ற நபரின் யூடியுப் சேனலில் வரும் வீடியோக்களை - பாரி சாலனின் வீடியோக்களை - பாஜவின் மாரிதாஸ் வீடியோக்களை பார்க்கிறவர்கள் லட்சக்கணக்கில் உண்டு.. அதில் பெரும்பாலும் புதியவர்கள்...
சத்தமே இல்லாமல் பாஜகவில் நிறைய பேச்சாளர்கள் -எழுத்தாளர்கள் உருவாகிகொண்டேயிருக்கிறார்கள்... நாதகவிலும் சீமானை தவிர்த்து இடும்பாவனம் கார்த்திக் -கல்யாண சுந்தரம் - என்று புதிய இளைஞர்கள் அடையாளப்படுத்தப்பட்டு யூடியுப் போன்ற சமூக வலை தளங்களில் பிரபலமாக்கப்பட்டு அவர்கள் மூலம் புதிய இளைஞர்கள் உருவாகிறார்கள்
நாதகவின் வளர்ச்சி என்பது பெரும்பாலும் சமூக வலைதளங்களிலே உருவாக்கப்பட்டது..சீமானின் வீடியோக்களை கொண்டு சேர்ப்பதற்காகவே பல யூடியுப் சேனல்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியுமா - ஒரு மேடை அமைத்து பேசி அதை ஒரே நேரத்தில் 6 சேனல்களில் வெளியிடுகிறார்கள்.. ஒரு சேனலில் குறைந்தது ஐம்பதாயிரம் பேர் பார்த்தால் 6 சேனலுக்கு 3 லட்சம் பேர் பார்ப்பார்கள்...இவையெல்லாம் பிரச்சார யுத்தி...
அப்படியே இந்தப்பக்கம் வருவோம்..

பெரியாரியகொள்கைகளை பரப்புவதற்க்கு எத்தனை யுடியுப் சேனல்கள் உள்ளன.. பெரியார் இயக்க தலைவர்களின் பேச்சுக்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள் ?? போய் தேடி பாருங்க மிக மிக குறைவாக இருக்கும்...
ஒவ்வொரு பெரியார் இயக்கங்களிலும் எத்தனை பேச்சாளர்கள் - எழுத்தாளர்கள் உண்டு ? நிறைய பேர் உண்டு .. ஆனால் வெளியே தெரியாது.. அவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் மக்களை போய் சேர்கிறதா ??? நிச்சயமாக இல்லை...
நம்மிடமிருக்கும் பேச்சாளர்களை -எழுத்தாளர்களை - போராளிகளை கண்டுகொள்ளாமல் தோழமை சித்தாந்த அமைப்புகளிடம் எதிர்பார்க்கிறோம்.. அவர்களையே அடையாளப்படுத்துகிறோம்
உண்மையில் பொருளாதார ரீதியில் வலுவாக இருக்கிற திராவிடர் கழகம் நினைத்தால் ஒரே நாளில் 100 யுடியுப் சேனல்களை கூட உருவாக்கிட முடியும்..அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து விட முடியும்..ஏனோ அவர்கள் செய்யவில்லை..இனியாவது செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்...
இதைவிட பெரிய கொடுமை .. கருஞ்சட்டைகளின் ஈகோ.. உள்முரண்களை வளர்த்துக் கொண்டேயிருப்பது...
ஒரு முறை ஒரு முக்கியமான பெரியாரிய ஆளுமையின் வீடியோவை ஒரு யூடியுப் சேனலில் இருந்து எடுத்து முகநூலில் அதை மக்கள் பார்வைக்காக பதிவிட்டேன்.. சிறிது நேரத்தில் அந்த யூடியுப் சேனலை நடத்துபவர் முகநூலில் புகார் கொடுத்து அந்த வீடியோவையே நீக்க வைத்து விட்டார் ...முகநூல் நிர்வாகத்தில் காரணம் கேட்டேன் "அந்த வீடியோ அவருடையது அதை வேறு யாரும் எடுத்து பயன்படுத்தக்கூடாது" என்று புகார் அளித்திருந்தாராம்😝😝
இவர்களுக்கு மத்தியில் சமூகவலை தளங்களில் பெரியாரிய கருத்துக்களை எப்படி கொண்டு சேர்ப்பது ??
பெரியார் எப்போதும் அப்டேட்டாக இருந்தார். பல ஆண்டுகளை முன்னோக்கி சிந்தித்தார். நம்மால் சமூக வலைதளங்களில் கூட அப்டேட் ஆக முடியல...
இந்த பதிவு அதிகபிரசங்கித்தனமாக கூட தெரியலாம்... இயக்கங்களில் எத்தனை புதியவர்கள் வந்திருக்கிறார்கள்.. பொது மக்களில் எத்தனை பேர் பெரியாரிய ஆதரவாளர்களாக உருவாகியிருக்கிறார்கள் என்பதை நேர்மையோடு சிந்தியுங்கள்

கருத்துகள் இல்லை: