வியாழன், 27 ஜூன், 2019

தங்க தமிழ்செல்வன் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்

தங்க தமிழ்செல்வன் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்தினத்தந்தி: சென்னை, அ.ம.மு.க.வின் முன்னணி நிர்வாகியான தங்கதமிழ்செல்வனுக்கும், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தங்க தமிழ்ச்செல்வன், ”அ.தி.மு.க.வில் இணைய சொல்லி யாரும் என்னை அணுகவில்லை. தி.மு.க. உள்பட எந்த கட்சியிலும் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை.
அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை. நீக்கினாலும் கவலையில்லை. எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் வரவில்லை. அச்சுறுத்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அரசியலில் இருந்து விலக மாட்டேன்” என்றார். இந்தநிலையில், தினகரனை விமர்சித்து பேசியதால், அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் வெளியேறினார்.
தங்க தமிழ்செல்வன் நாளை காலை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்க தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள் தேனியில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேனியில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்தவும் தங்கதமிழ்செல்வன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: