Amma Shagasraa : நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய மொத்த இந்தியர்களில் தமிழக யாத்திரகர்கள் மட்டும் மத்த 35 மாநில,யூனியன் பிரதேச யாத்திரிகர்கள் விட அதிகம்..
🎯என்னதான் நாம் திராவிட கட்சிகளினால் இங்கே லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது..தமிழ்நாட்டு பின்னோக்கி போய்விட்டது என்று கூப்பாடு போட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை தேவை நிறைவேறிவிட்டது...
பொருளாதாரத்திலும் ஓரளவு தன்னிறைவு... அதனால்தான் அடுத்த கட்டத்திற்கு சுற்றுலா.. நாலு இடம் பார்க்க வேண்டும் என்று கிளம்புகிறார்கள்....
இது கைலாசா யாத்திரை புள்ளி விவரம் மட்டுமல்ல... காசியிலிருந்து காஷ்மீர் வரை மலேசியாவில் இருந்து தாய்லாந்து வரை நான் போன எல்லா சுற்றுப் பயணங்களிலும் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் தான்.... அதை நான் என்னுடைய பல கட்டுரைகளிலும் குறிப்பிட்டு இருப்பேன் அந்த அளவு தமிழ்நாடு இந்தியாவில் ஒரு வெளிநாடு மாதிரி முன்னேறி தான் இருக்கிறது....
💕ஹனிமூன் தம்பதிகள்.. ஓய்வு பெற்றவர்கள்.. 50 வயதுக்கு மேல் வீட்டின் கடமைகளை முடித்த பெண்கள்... கூட்டம் கூட்டமாக இப்பொழுது கிளம்பி விடுகிறார்கள்..
இவர்களின் பயமும் இவர்களுடைய அதீத ஆர்வமும் இப்பொழுது பணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது...
அதில் நியாயமான நல்ல ஏஜெண்டுகளும் இருக்கிறார்கள்.. எந்தவித அரசின் அனுமதியும் பெறாத புற்றீசல்கள் போல 10 பேரை சேர்ந்தாலே கூட்டிட்டு போகக்கூடிய ஏஜென்ட்டும் இருக்கிறார்கள்...
இதே நேபாளத்தில்... காட்மண்ட்,பொக்கார, முக்திநாத் ஆயிரக்கணக்கானவர்கள் போவார்கள்..அம்பதாயிரம் இருந்தால் போய் வந்து விட முடியும்...கைலாஷ் யாத்திரை கடினமான பயணம்...லட்சங்களில் செலவாகும்... அதனால் அதற்கு போக கூடிய ஆட்கள் கம்மி...
என்னுடைய அனுபவத்திலே...
எங்களுடைய 11 நாள் நேபாள் பயணத்துக்கு இந்தியாவில் கோரக்பூரில் இருந்து இந்திய ரிஜிஸ்ட்ரேஷன் உள்ள கார் எடுத்துக் கொண்டோம்...
ஒரு நாளைக்கு 1100 நேபாள் ரூபாய் கட்ட வேண்டும்.. நாங்கள் கட்டி விட்டு நேபாள் உள்ள என்டரி ஆன பிறகு நிறைய இடங்களில் செக்கிங்... ஆனால் அந்த பணம் கட்டாதவர்கள் கூட அங்கே இருக்கக்கூடிய காவல் துறைக்கு பணத்தை கொடுத்து விட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்...நேபாளிலும் லஞ்சம் கொடுத்தால் எத வேணாலும் சாதிக்கலாம்... அந்த மாதிரி ஒரு காவல்துறை...
முக்திநாத்-- அடிக்கடி நிலச்சரிவுகளும், விபத்துகளும் நடக்கக்கூடிய மரண பயத்தை ஏற்படுத்தக் கூடிய பாதை..
இங்கே இருக்கக்கூடிய ட்ராவல் ஏஜென்ட் முக்திநாத் யாத்திரைக்கு நம்மளை கூட்டிக்கொண்டு போக முடியாது.. அதற்கென்று நேபாள அரசாள் தனியாக ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்..
பொக்கராவில் உள்ள முக்திநாத் ஏஜென்டிடம் இவர்கள் நம்மை ஒப்படைப் பார்கள்...
முக்திநாத் யாத்திரைக்கு தனி பெர்மிட் வாங்க வேண்டும்.. அந்த ஏஜென்ட்கள் ஸ்கார்பியோ காரில் ஆறு பேரை அழைத்துச் செல்வார்கள்..
அவர்கள் எங்களுக்கு தந்த அந்த பெர்மிட் பார்த்தால் வேறு யாரோ பேரில் இருந்தது.. அப்புறம் மிகுந்த சண்டை போட்டு ஒரு நாள் தாமதமாகி எங்கள் பெயரில் பெர்மிட் வாங்கிய பிறகு தான் நாங்கள் போனோம்..
""நாங்கள் எப்பொழுதுமே இப்படித்தான் கூட்டிக் கொள்கிறோம்.. நீங்கள் தான் இப்படி கேட்கிறீர்கள் என்று எங்களிடம் வாதாடினார்கள்...
🎯வெளிநாடுகளில் நம்மளுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு போவது பெரும் ஆபத்து... ஏதாவது சிக்கல் ஆனால் பெரும் பிரச்சனை..
இப்ப விபத்து நடந்த இந்த கைலாஷ் யாத்திரையில் இது சீனா சம்பந்தப்பட்டது... இந்த பயணிகள் எல்லோரும் டிராவல்ஸ் இன்சூரன்ஸும் மெடிக்கல் இன்சூரன்ஸும் எடுத்திருப்பார்கள்.... ஆனால் மற்ற எந்த ட்ராவல் ஏஜெண்டும் இன்சூரன்ஸ்,மெடிக்கல் இன்சூரன்ஸ் கேட்கப்போவதில்லை... அதிகமாக யாரும் எடுப்பதில்லை...
இப்படி ஏதாவது இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும்.. நமக்கு ஏதாவது ஒரு அவசரத்திற்கு மலையில் மாட்டிக் கொண்டாலும்..ஹெலிகாப்டர் வந்தாலும்.. ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும்..லட்சங்களில் செலவாகும்.. சாதாரண குடும்பங்களால் அது சமாளிக்க முடியாது...
இப்பொழுதெல்லாம் வெறும் 2000டு 3000/-ரூபாய்க்கு பத்து நாளைக்கு ஆன இன்சூரன்ஸ் மெடிக்கல் கிளைம் எடுத்தாலே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அளவுக்கு கிளைம் ஆகிறது..
இன்னொரு முறை நாங்கள் தோழிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு வெளிநாட்டு பயணத்திற்காக மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டிருந்த மதுரையில் ஒரு ஏஜென்சி இடம் புக் பண்ணி முழு பணத்தையும் கட்டி விட்டோம்... அதற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட நாள் சொன்னார்கள்.. அன்று விமானம் கேன்சல் ஆகிவிட்டது என்று சொன்னார்கள்.. அதற்குப் பிறகு ஒரு 10 நாள் கழித்து ஒரு தேதி சொன்னார்கள்.. அன்றும் ஏதோ சாக்கு போக்கு சொல்லி விட்டார்கள்... அந்த ட்ரிப் கேன்சல் என்றார்கள்... அவர்களிடம் பணத்தை திரும்ப வாங்குவதற்குள் நாங்கள் பட்ட பாடு..ஒரு பெரிய இராமாயண கதையே எழுதலாம்..
நபருக்கு ஐம்பதாயிரம் என்று வைத்துக் கொண்டாலும் பத்து பேர் ஐந்து லட்சம் ரூபாய் ஆகிவிட்டது.. மூன்று மாதங்களுக்கு வட்டி எவ்வளவு.??அந்த மாதிரி அவர்கள் எத்தனை பேரிடம் வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.. .
ஓரளவு பின்பலம் கொண்ட எங்களுக்கே அந்த பணத்தை திரும்பி வாங்குவதற்குள் பெரும் பாடு ஆகிவிட்டது..
நிறைய டிராவல ஏஜெண்டுகள் அரசின் முறையான கண்காணிப்போ.,அனுமதிகளோ எதுவும் இல்லை...
நாமெல்லாம் ரயிலில் ஊருக்கு செல்வது என்றால் மூன்று மாதத்திற்கு முன்னாடி புக் செய்ய வேண்டும் அதுவும் ஒன்று, இரண்டு டிக்கெட்டுக்கு.. இந்த ட்ராவல் ஏஜென்ட்கள் பல்வேறு பெயர்களில் ஏற்கனவே ரயிலில் புக் செய்து வைத்து விடுவார்கள்... அந்த மாதிரி நிறைய தவறுகள் இந்த சுற்றுலாவில் நடக்கிறது... அரசு கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது..
நாளைக்கு இயற்கை பேரிடர்கள்.. வேறு எதனாலோ நமக்கு ஆபத்து ஏற்பட்டால் நம் அடையாளத்தை தொலைத்து விட்டு போகும் பொழுது குடும்பத்திற்கு கிடைக்கக்கூடிய இழப்பீடு கிடைக்காது..
அந்த நேரத்தில் நம்மளுடைய டிராவல் இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ் கூட பயன்படாது..
பயணம் என்பது மகிழ்ச்சிக்காக.
அது நம் குடும்பத்திற்கு வாழ்நாள் துயரமாக மாறிவிடக்கூடாது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக