புதன், 26 ஜூன், 2019

எம்.பி ஜோதிமணி, செந்தில் பாலாஜியின் செயல்களால் திமுக - காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ?

karurவெப்துனியா : குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும். எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்று தெரிவித்தார்.>அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கே.என்.நேருவின் பேச்சுக்கு பதில் அளித்த, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், கூட்டணி சூழ் நிலைக்கு ஏற்ப அமைகிறது. நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை என்றார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறுகையில், கே.என். நேருவின் கருத்து தி.மு.க.வின் கருத்தாகி விடாது.
அவர் எனக்கு நல்ல நண்பர். ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை என்றார். இதனால் கே.என்.நேருவின் பேச்சு தி.மு.க-காங்கிரஸ் இடையே திடீர் மோதலை ஏற்படுத்தியது. தமிழகத்தினை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியே கோஷ்டி மோதலின் கூடாரமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு மானசீக காங்கிரஸ் கட்சியினர் ஏன் ? தி.மு.க வுடன் நாம் ஏன் ? இணைய வேண்டுமென்று சிந்திக்க தொடங்கியுள்ளனர்.


மேலும், காங்கிரஸ் தயவினால் தானும், மோடியின் எதிர்ப்பினாலும் தான் தி.மு.க வெற்றி பெற்றதாகவும், தி.மு.க கட்சிக்கும், தி.மு.க வில் அங்கம் வகிக்கும், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக எங்கும் வாக்கு வங்கி அமையவில்லை என்று ஒருமித்த கருத்தாக, தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் கருதி வரும் நிலையில், கரூர் காங்கிரஸ் கமிட்டியினை பொறுத்தவரை தலைகீழாக மாறியுள்ளது.

ஏன்னவென்றால் தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ வுமான செந்தில் பாலாஜியும், கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி ஜோதிமணியும் உறவினர்கள், அக்கா தம்பி முறையாம், அதலால் கட்சியோ, அல்லது கூட்டணியோ எப்படியோ இருக்கட்டும், நாம் இருவரும் ஒன்றாகவே பயணிக்கலாம் என்றும் இருவரும் ஒன்றாகவே திடீர், தீடீரென்று முடிவுகள் எடுத்து அதிரடியாக களமிறங்கியதோடு, மணல் மாபியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜோதிமணி, மணல் அள்ள வேண்டுமென்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு கொடுத்தது, ஜோதிமணியின் பேஸ்புக் மற்றும் டுவீட்டர் வாசிகள் மிகவும் அதிர்ச்சியில் ஆளாக்கியது. இந்நிலையில் அரவக்குறிச்சியில், அரசிற்கு சொந்தமான எம்.எல்.ஏ அலுவலகம் இருந்தும் இன்றும் அதை பயன்படுத்தாமல்., கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனியார் வாடகை கட்டடத்தில், தனது சொந்த செலவில், எம்.எல்.ஏ. அலுவலகத்தை செந்தில் பாலாஜி திறந்தார்.

இதிலும் கட்சி முக்கிய பிரமுகர்களை மட்டும் அழைத்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும்., அந்த தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ வுமான  செந்தில் பாலாஜி., அங்கிருந்த உள்ளூர் தி.மு.க பிரமுகர்களை கழட்டி விட்ட நிலையில், அதே நிகழ்ச்சியில் அதே வாடகை கட்டிடத்தில் , கரூர் எம்.பி., ஜோதிமணிக்கும், தனது அலுவலகத்திலேயே தனிஅறை ஒதுக்கி தந்துள்ளார் என்றால் நீங்களே பாருங்கள் என்கின்றனர் கரூர் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்.

எது எப்படியோ, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி இருக்கா ? இல்லையா ? என்று தெரியாமல்., இருக்கும் நிலையில், இன்றும் தலைமையும் முடிவு செய்யாத நிலையில், தற்போதே, எது எப்படியோ, அப்போதே, கடந்த வருடத்திற்கு முன்னர், அரவக்குறிச்சியில் இதே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் போது,, இதே தொகுதியினை தி.மு.க விற்கு கட்சியின் இரு தலைமைகளும் காங்கிரஸ் – தி.மு.க வினர் முடிவெடுத்து அறிவித்த நிலையில், நான் தான் வேட்பாளர் என்றும் சுயேட்சையாக கூட போட்டியிடுவேன் என்றும் கூறியவர் தான் இந்த ஜோதிமணி என்பதினால், உள்ளாட்சி தேர்தலில் தலைமையை மீறி முடிவெடுக்க தற்போதே ஒத்திகை பார்க்கின்றது போல தான் இருக்கின்றதாம், உள்ளூர் வாசிகளின் கருத்தும், தி.மு.க மற்றும் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் கருத்தும் கூட., பொறுத்து தான் பார்க்க வேண்டுமென்கின்றனர் உண்மையான காங்கிரஸ் பிரமுகர்கள்

கருத்துகள் இல்லை: