செவ்வாய், 25 ஜூன், 2019

சிறுவனை துன்புறுத்தி வீடியோ .. அய்யோ என்னைய விட்டுடுங்கண்ணா” – கதறும் சிறுவன்


வெப்துனியா : சிறுவன் ஒருவனை சிலர் கடத்துவதும், சிறுவன் அவர்களிடம் “என்னைய விட்டுடுங்கண்ணா” என்று கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
ஃப்ராங்க் வீடியோ எனப்படும் அந்த வீடியோவில், இரண்டு இளைஞர்கள் அந்த சிறுவனை கடத்துவது போல நடிக்கிறார்கள். யாரிடமோ போனில் “அண்ணா சீக்கிரம் வந்து பையனை கொண்டு போங்கண்ணா” என்று பேசுகிறார்கள். இதை கேட்டு கதறி அழும் சிறுவன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறான். “அண்ணா என்னைய விட்ருங்கண்ணா. அம்மா என்னைய விட்டுட்டு எங்கம்மா போன.. வாம்மா.. எங்கம்மா இருக்க” என கதறுகிறான். அப்போதும்கூட மனது இறங்காத அந்த இளைஞர்கள் மீண்டும் போனில் “அண்ணா பையன் கத்துறான். சீக்கிரம் காரை எடுத்துகிட்டு வாங்க. கையை காலை கட்டு தூக்கிட்டு போங்க” என கூறுகிறார்.

அந்த சிறுவன் “அண்ணா உங்களுக்கு எவ்வளவு காசு வேணாலும் தறேன் என்ன விட்டுடுங்கண்ணா” என கெஞ்சுகிறான். அந்த காட்சி பார்ப்போர் கண்களில் கண்ணீர் வரவைக்கக்கூடியதாக இருக்கிறது.
 ஒருசிலர் இந்த வீடியோவை பார்த்து சிரித்தாலும் பலர் இதற்கு எதிராக தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். சமீப காலமாகவே குழந்தைகளை துன்புறுத்தி அதை வீடியோவாக வெளியிடுவது ஒரு பழக்கமாக மாறி வருகிறது என பலர் திட்டியும் வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: